உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/439

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

422

வரலாறு:

இளங்குமரனார் தமிழ் வளம் – 13

(நேரிசை வெண்பா)

“மன்றலங் கொன்றை மலர்மிலைந் துஃகுவஃ

கென்று *பயிரும் இடைமகனே !- சென்று மறியாட்டை உண்ணாமை வன்கையால் வல்லே

அறியாயோ 'அண்ணாக்கு மாறு?”

யா. கா. 49. மேற்.

எனவும், ஒழிந்தனவும் இடைக்காடனார் பாடிய ஊசிமுறியுட் கண்டு, அலகிட்டுக் கொள்க. பிறவும் அன்ன.

66

“எழுத்தல் இசையே அசையொடு சீர்க்கண்

நிறைக்கவும் படுமென நேர்ந்திசி னோரே”

என்றார் பிறரும்.

4

யா. கா. 43 மேற்.

‘வழுக்கா மரபின் வகையுளி சேர்த்தலும்' என்பது, அசையும் சீரும் தளையும் அடியும் தொடையும் வண்ணமும் செய்யுட்கட் கழியாமை வகையுளி சேர்த்தலும் என்றவாறு.

26

வகையுளி' என்பது, முன்னும் பின்னும் அசை முத லாகிய உறுப்புக்கள் நிற்புழி அறிந்து குற்றப்படாமை வண்ணம் அறுத்தல் என்றவாறு.

66

அவற்றுட் சில வருமாறு:

(குறள் வெண்பா)

கடியார்பூங் கோதை கடாயினான் திண்டேர் சிறியாடன் சிற்றில் சிதைத்து”

யா. கா. 43 மேற். இதனுள் ‘கடியார்’ என்றும், ‘பூங்கோதை’ என்றும், ‘கடாயினான்' என்றும் அலகிடின், ஆசிரியத்தளையும் கலித்தளையும் தட்டு, 'வெள்ளையுட் பிறதளை விரவா' (யா. வி. 22) என்னும் இலக்கணத்தோடு மாறு கொள்ளும் ஆதலின், அதனைக் கடியார்பூ' என்று புளிமாங்காய் ஆகவும், ‘கோதை’ என்று 'தேமா' ஆகவும் அலகிடத் தளையும் சீரும் வண்ணமும் சிதை

யாவாம்.

1.

66

(நேரிசை வெண்பா)

'பாடுநர்க்கும் ஆடுநர்க்கும் பண்டுதாம் கண்டவர்க்கும் ஊடுநர்க்கும் கூடுநர்க்கும் ஒத்தலால் - நீடுநீர்

அண்ணாக்கும் ஆறு

-

தலையைத் தூக்கும் விதம்.

2. சொன்முடிபு நோக்காது சீர்முடிபு நோக்கி அலகூட்டுதல் (பா. வே) *திரியும்.