உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/440

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யாப்பருங்கலம்

423

- யா.வி. 95. மேற்.

நல்வயல் ஊரன் நறுஞ்சாந் தணியகலம் புல்லலின் ஊடல் இனிது' இப்பாட்டினுள், டுகரமும் நகரமும் பிரிந்திசைத்தனவாயினும், இரண்டினையும் கூட்டி, நிரையசையாக அலகிட்டுக் கொள்க. அல்லாவிடின், வண்ணம் அழிந்து கிடக்கும்.

(நேரிசை ஆசிரியப்பா)

66

“போதார் கூந்தல் இயலணி அழுங்க

அழலா னாவெங் கண்ணே தெய்யோ!”

ஏதி *லாட்டியை நீபிரிந் ததற்கே

அழலவிர் மணிப்பூண் நனைய

ஐங்குறு நூறு 232.

தனுள், ‘அழலானா' என்றும், ‘எங்கண்ணே' என்றும்,

தெய்யோ’ என்றும் அலகிடின், குற்றப்பட நிற்கும், ஆசிரியமும் முச்சீரால் இறுக என்னும் ஒத்து இலாமையின் ; அதனை வகையுளி சேர்த்தி, முதற்சீரைப் 'புளிமா’ என்னும் சீராகவும், அல்லாதன மூன்றும் 'தேமா' என்னும் சீராகவும் அலகிட்டுக்கொள்ளப் பிழையாதாம்.

'தாழிரும் பிணர்த்தடக்கை (யா. வி. பக். 220) என்பதனுள், ‘தாழிரும் பிணர்த்தடக்கை’ என்பது ஓரடியாகவும், ‘தண்கவுள் இழிகடாத்த' என்பது ஓரடியாகவும், காழ்வரக் கதம்பேணா' என்பது ஓரடியாகவும், ‘கடுஞ்சினத்துக் களிற்றெருத்தின் என்பது ஓரடியாகவும் அலகிட்டால், இருசீர் அடி வஞ்சிப்பாவாய்த் தனது தூங்கல் ஓசை பிழையாது நிற்கும் என்ப ஒருசாரார். இனி ஒருசாரார், வஞ்சிப்பாவினுள் கலியடியும் வரப்பெறும் ஆகலின், முதல் இரண்டடியும் கலியாக்கொண்டு, கலியடி விரவிய வஞ்சிப்பா என்று வழங்குவர் எனக் கொள்க. பிறவும் அன்ன. (நேரிசை வெண்பா)

66

அருள்நோக்கும் நீரார் அசைசீர் அடிக்கண்

பொருள்நோக்கா தோசையே நோக்கி - மருள்நீக்கிக் கூம்பவும் கூம்பா தலரவும் கொண்டியற்றல் வாய்ந்த வகையுளியின் மாண்பு"

தனை விரித்து உரைத்துக் கொள்க. பிறரும்,

66

“எழுத்தல் கிளவியின் அசையொடு சீர்நிறைத் தொழுக்கலும் அடியொடு தளைசிதை யாமை வழுக்கில் வகையுளி சேர்த்தலும் உரித்தே

என்றார் எனக் கொள்க.

(பா.வே) *லாளனை. *பெயலானாவென்.

- (அவிநயம்)