உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/441

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

424

இளங்குமரனார் தமிழ் வளம் – 13

5

‘அம்மை முதலிய ஆயிரு நான்மையும்' என்பது, அம்மை, அழகு, தொன்மை, தோல், விருந்து, இயைபு, புலன், இழைபு என வை எட்டும் எனக் கொள்க.

(1)

அம்மையாவது,

சிலவாய

மெல்லியவாய

சொற்களால் ஒள்ளிய வாய பொருண்மேற் சிலவடியாற் சொல்லப்படுவது. என்னை?

1‘“சின்மென் மொழியாற் சீரிது நுவலின் அம்மை தானே அடிநிமிர் வின்றே”

என்றாராகலின்.

வரலாறு:

(குறள் வெண்பா)

‘அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதினோய் தன்னோய்போற் போற்றாக் கடை?

எனக் கொள்க.

(2) அழகாவது,

திருக்குறள் 315

செய்யுட்

சொல்லாகிய

திரி

சொல்லினால், ஓசை இனியதாக, நன்கியாக்கப்படுவது.

என்னை?

66

‘செய்யுண் மொழியாற் சீர்புனைந் தியாப்பின் அவ்வகை தானே அழகெனப் படுமே

என்றாராகலின்.

வரலாறு:

- தொல். செ. 294

(நேரிசை ஆசிரியப்பா)

66

'துணியிரும் *பரப்பகம் குறைய வாங்கி அணிகிளர் அடுக்கல் முற்றிய எழிலி காலொடு மயங்கிய கனையிருள் நடுநாள் யாங்குவந் தனையோ ஓங்கல் வெற்ப! நெடுவரை மருங்கிற் *பரம்பற இழிதரும் கடுவரற் கலுழி நீந்தி

வல்லியம் வழங்கும் கல்லதர் நெறியே!”

எனக் கொள்க.

(3) தொன்மையாவது, பழமைத்தாய் நிகழ்ந்த பெற்றி உரைக்கப் படுவனவற்றினமேற்று. என்னை?

1.

"வனப்பியல் தானே வகுக்குங் காலைச்

சின்மென் மொழியால் சீர்புனைந் தியாப்பின்

அம்மை தானே அடிநிமிர் பின்றே”

(பா. வே) *பௌவம். *பாம்பென.

- தொல். செய். 238.