உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/442

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யாப்பருங்கலம்

425

“தொன்மை தானே,

உரையொடு புணர்ந்த பழைமை மேற்றே"

என்றாராகலின்.

வரலாறு:

“செறிதொடி உவகை கேளாய் செஞ்சுடர்த் தெறுகதிர்ச் செல்வன்....’

- தொல். செய். 285.

என்பது போல்வனவும், பாரதமும், இராமாயணமும் கொள்க. (4) தோல் என்பது, இழுமென்று மெல்லியவாய் சொற் களால் விழுமிய வாய்க் கிடப்பனவும், எல்லாச் சொற்களோடும் கூடிய பல அடியை உடை ய வாய்க் கிடப்பனவும் என இரண்டு வகைப்படும். என்னை?

“இழுமென் மொழியால் விழுமியது நுவலினும் பரந்த மொழியால் அடிநிமிர்ந் தொழுகினும் தோலென மொழிப தொன்மொழிப் புலவர் என்றாராகலின்.

வரலாறு:

(நிலைமண்டில ஆசிரியப்பா)

“பாயிரும் பரப்பகம் புதையப் பாம்பின் ஆயிர மணிவிளக் கழலும் சேக்கைத் துணிதரு வெள்ளம் துயில்புடை பெயர்க்கும் ஓளியோன் காஞ்சி எளிதெனக் கூறின்,

இம்மை இல்லை மறுமை இல்லை

நன்மை இல்லைத் தீமை இல்லைச்

செய்வோர் இல்லைச் செய்பொருள் இல்லை

அறவோர் யாரஃ திறுவுழி இறுகென்”

- தொல்ட. செய். 236.

இது மார்க்கண்டேயனார் காஞ்சி, இழுமென் மொழியால்

விழுமியது நுவன்றது.

“திருமழை தலைஇய இருணிற விசும்பின்”

மலைபடுகடாம் 1

என்பது, பரந்த மொழியால் அடி நிமிர்ந்து ஒழுகியது. மலைபடுகடாம்.

து

(5) விருந்து என்பது. புதியவாயினவற்றின் மேற்று. அவை இப்பொழுது உள்ளாரைப் பாடும் பாட்டு.

என்னை?