உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/443

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

426

66

இளங்குமரனார் தமிழ் வளம் – 13

விருந்தே தானும்,

புதுவது புனைந்த யாப்பின் மேற்றே"

தொல். செய். 287.

என்றாராகலின். அவை 'வழிப்பட்டுழி அறிந்துகொள்க.

(6) இயைபு என்பது, ஞ, ண, ந, ம, ன, ய, ர, ல. வ, ழ, ள எனப்பட்ட பதினோரு புள்ளி ஈறாய் வந்த பாட்டு எல்லாம். பதினோருதாரணமும் வந்தவழிக் கண்டுகொள்க.

அவை என்னை?

66

ஞகாரை முதலா ளகாரை ஈற்றுப் புள்ளி இறுதி இயைபெனப் படுமே"

என்றாராகலின்.

- தொல். செய். 238.

(7) புலன் என்பது, இயற்சொல்லாற் பொருள் தோன்றச் செய்யப்படும் பாட்டு என்னை?

  • 66

'தெரிந்த மொழியாற் செவ்விதிற் கிளந்து

தேர்தல் வேண்டாது குறித்தது தோன்றின்,

புலனென மொழிப் புலனுணர்ந் தோரே"

-தொல். செய். 239.

என்றாரகலின்.

வரலாறு:

66

(நேரிசை ஆசிரியப்பா)

‘பார்க்கடல் முகந்த பருவக் கொண்மூ வார்செறி முரசின் முழங்கி ஒன்னார் மலைமுற் றின்றே வயங்கு துளி சிதறிச் சென்றவள் திருமுகம் காணக் கடுந்தேர் இன்றுபுகக் கடவுமதி பாக ! உதுக்காண் 2மாவொடு புணர்ந்த மாஅல் போல இரும்பிடி உழைய தாகப்

பெருங்காடு மடுத்த காமர் களிறே”

எனக் கொள்க.

(8) இழைபு என்பது, வல்லொற்று யாதும் தீண்டாது செய்யுளியலுடையாரால் எழுத்தெண்ணி வகுக்கப்பட்ட குறளடி முதலாப் பதினேழ் நிலத்து ஐந்தடியும் முறையானே உடைத்தாய் ஓங்கிய சொற்களான் வருவது. என்னை?

1.

இவ்விருந்துக்கு இலக்கியம், முத்தொள்ளயிரமும், பொய்கையார் முதலாயினோர் செய்த அந்தாதிச் செய்யுளும் என உணர்க. கலம்பகம். முதலாயினவும் சொல்லுப என்று எடுத்துக் காட்டுவர் பேராசிரியர். 2. திருமகளொடு. (பா. வே) *சேரி.