உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/446

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யாப்பருங்கலம்

ஓடா மலையன் வேலிற்

கடித மின்னுமிக் கார்மழைக் குரலே"

429

இலக். விளக். 757 மேற்.

யா. வி. 37 மேற்.

யா. கா. 41 மேற்.

வல்லிசை

என்னும் பாட்டுக் கொள்க.

என்னை?

“வல்லிசை வண்ணம் வல்லெழுத்து மிகுமே” என்றாராகலின்.

வண்ணமாவது, வல்லெழுத்து மிகுவது.

- தொல். செய். 214.

வரலாறு:

(பஃறொடை வெண்பா)

“வட்டொட்டி அன்ன வணர்முடப் புன்னைக்கீழ்க் கட்டிட்டுக் கண்ணி தொடுப்பவர் தாழம்பூத்

தொட்டிட்டுக் கொள்ளும் துறைச்சேர்ப்ப ! நின்னொடு விட்டொட்டி உள்ளம் விடாது *நினையின்மேல்

ஒட்டொட்டி நீங்காதே ஒட்டு”

எனக் கொள்க.

இலக். விளக். 757. மேற்.

மெல்லிசை வண்ணமாவது, மெல்லெழுத்து மிக்கு

வருவது. என்னை?

“மெல்லிசை வண்ணம் மெல்லெழுத்து மிகுமே”

எனக் கொள்க.

தொல். செய். 215.

வரலாறு:

(நேரிசை ஆசிரியப்பா)

“பொன்னின் அன்ன புன்னைநுண் தாது

மணியின் அன்ன நெய்தலங் கானல்

மனவென உதிரும் மாநீர்ச் சேர்ப்ப !

மாண்வினை நெடுந்தேர் பூண்மணி ஒழிய மம்மர் மாலை வாநீ

நன்மா மேனி நயந்தனை எனினே

எனக் கொள்க.

99

- இலக். விளக். 757. மேற்.

இயைபு வண்ணம் என்பது, இடையெழுத்து மிக்கு

வருவது. என்னை?

(பா. வே) *நினையுமேல்.