உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/476

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6

யாப்பருங்கலம்

459

எனவும் இத்தொடக்கத்தனவற்றுள் குற்றுகரம் இன்றியேயும் நாலசைச்சீர் வந்தன. பிறவெனின், அவற்றுள் ‘அடி' என்பதும், 'மா' என்பதும் முதற்கண் கூனாகவும்; ‘குழி' என்பதும், ‘துறை’ என்பதும் இடைக்கண் கூனாகவும்; ‘வழி' என்பதும், ‘மிசை' என்பதும் கடை க்கண் கூனாகவும் வைப்ப, நாலசைச்சீர் அன்றாம்.

வஞ்சி அடியின் முதலும் இடையும் இறுதியும் அசை கூனாகப் பெறும். வஞ்சியடி முதற்கண் சீர் கூனாகவும் பெறும். இடையும் இறுதியும் உகர ஈறாகிய நேரீற்று இயற்சீரும் கூனாய் வரப்பெறும். அல்லாச்சீர் கூனாய் வரப்பெறா. நேர்பசை நிரைபசை வேண்டும் ஆசிரியர்க்கும் உகர ஈறாகிய நேரீற்று இயற்சீரும் அசையாம். இவை எல்லா ஆசிரியர்க்கும் துணிபு எனக் கொள்க. பிறவும் அன்ன. இவையும் அவர் காட்டியவே எனக் கொள்க.

66

இன்னும் அவர் காட்டுமாறு.

'அதற்கொண்டு, கலங்கொண்டன கள்ளென்கோ! காழ்கோத்தன சூட்டென்கோ!”

எனவும்,

6 எனவும்,

"வேந்து, வேல்வாங்கி வியந்துருத்தலின்”

"தெருவு தேரோடத் தேய்ந்தகன்றன”

எனவும் கொள்க.

- யா. வி. 93. மேற்.

புறநானூறு 345.

இவற்றுள், 'அதற்கொண்டு' எனவும், வேந்து' எனவும்,

‘தெருவு' எனவும் இவை எல்லாம் சீர் கூனாயின.

இவற்றிற்கு இலக்கணம் சொல்லுமாறு:

“உறுப்பிற் குறைந்தவும் பாக்கண் மயங்கியும்

மறுக்கப் படாத மரபின வாகியும்

எழுவாய் இடமாய் அடிப்பொருள் எல்லாம் தழுவ நடப்பது தான்றனிச் சொல்லே'

“வஞ்சி மருங்கின் இறுதியும் ஆமெனக் கண்டனர் மாதோ கடனறிந் தோரே”

என்பன காக்கைபாடினியம்.

“தனிச்சொல் என்ப தடிமுதற் பொருளொடு தனித்தனி நடக்கும்; வஞ்சியுள் ஈறே”

என்பது சிறுகாக்கைபாடினியம்.

யா. வி. 94. மேற்.

யா. வி. 94. மேற்.