உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/479

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

462

இளங்குமரனார் தமிழ் வளம் – 13

“நேரீற் றியற்சீர் கலிவயின் இலவே;

வஞ்சி மருங்கினும் இறுதியின் இலவே"

என்பது நற்றத்தம்.

'செங்கண் மேதி கரும்புழக்கி (பக். 96.) என்றித் தொடக்கத் தனவற்றைச் சிந்தடியும் குறளடியும் விரவி வந்த வஞ்சிப்பா எனக் கொள்க.

(கலி விருத்தம்)

“நேரசை இறுதியாய் நிகழும் ஈரசைச் சீர்க்கடை வஞ்சியுட் செலவும் கூறினார் நேர்நிரை நேர்பொடு நிரையும் நாலசைச் சீருநன் கெடுத்துடன் செப்பி னாரரோ”

இது பல்காயனார் மதம்.

66

"குற்றிய லுகரமும் கூனும் சிந்துமா முற்றிய அன்றியும் மொழிவ ராமெனின், தெற்றென நெடிலடி சேரும் என்பது சொற்றபின் நாலசைத் தோற்றம் இல்லையே’ இதன் கருத்து,

"சிறுசோற்றானும் நனிபல கலத்தன் மன்னே”

என்றித்தொடக்கத்தன ஆசிரிய அடிகளுள்ளும்,

கண்டல்வண்டற் *கழிபிணங்கிக் கருநீல மதுவிம்மவும்

புறநானூறு 235

கொண்டல்கொண்ட பணைமுன்றிற் பண்ணையாம் குடிகெழுவவும்” என்றித் தொடக்கத்துக் கொச்சக அடிகளுள்ளும் முன்சொன்ன பெற்றி அன்றி நாலசைச்சீர் வந்தன பிறவெனின், அவைதாம் நாற்சீர் அல்ல என்று ஐஞ்சீர் அடியாக வைப்ப, நாலசைச்சீர் அல்லவாம். தொல்காப்பியனாரும் கீரனாரும் முதலாக உள்ளார், ஒருசார் ஆசிரியத்துள்ளும் கலியுள்ளும் ஐஞ்சீரடியும் அருகி வரப்பெறும் என்று,

“என்பொடு தடிபடு வழியெல்லாம் எமக்கீயு மன்னே! அம்பொடு வேல்நுழை வழியெல்லாம் தானிற்கு மன்னே!”

என்னும் ஆசிரிய அடிகளும்,

-

புறநானூறு 235

“அணிகிளர் சிறுபொறி அவிர்துத்தி மாநாகத் தெருத்தேறி”

என்னும் கலியடியும் காட்டுவாராகலின் என்பது. (பா. வே) *கழிபிணங்க.

யா. வி. 93. மேற்.