உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/480

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யாப்பருங்கலம்

அவர் சொல்லுமாறு:

“வெண்டளை விரவியும் ஆசிரியம் விரவியும்

ஐஞ்சீர் அடியும் உளவென மொழிப”

என்பது தொல்காப்பியம்.

463

தொல். செய். 62.

ஆசிரியம் கலி' என்று அதிகாரம் வருவித்து உரைக்கப் பட்டது இச்சூத்திரம்.

66

‘ஐஞ்சீர் அடுக்கலும் மண்டிலம் ஆக்கலும்

வெண்பா யாப்பிற் குரிய அல்ல

என நக்கீரர் அடிநூலுள் 'வெண்பா யாப்பிற்கு உரிய அல்ல’ என்றமையால், ஆசிரியத்துக்கும் கலிக்கும் ஐஞ்சீர் அடி புகுதலும் மண்டிலம் ஆகலும் உரிய என்று விரித்து உரைத்தார் எனக் கொள்க.

(கலி விருத்தம்)

"சேரும் நேரடிப் பாவிலைஞ் சீரடி ஏரும் வெள்ளையல் லாவழி என்பது சோர்வி லாததொல் காப்பியத் துள்ளுநக் கீர னாரடி நூலுள்ளும் கேட்கவே" இதனை விரித்து உரைத்துக் கொள்க.

“தகைபெறு பொதியிலெம் தலைவன் ஆணையின் தொகைவகை விரிபடச் சொற்ற நூல்களுள் வகையுளி சேர்த்துதல் வகுப்பர் ஆதலால், நகைபெற நாலசை நடப்ப தில்லையே”

இதன் கருத்து,

(எழுசீர் ஆசிரிய விருத்தம்)

“கங்கணக் கைப்பந்தார்க் கனைகழற்காற்

கருவரைபோல் நீண்ட மார்பிற் காமர்கோலம்

பொங்கிய சாமரை பொற்ப ஏந்திப்

புடைநின் றமரர்கள் போற்றிவீசச்

சிங்கம் சுமந்துயர்ந்த ஆசனத்தின்மேற்

சிவகதிக்கு வேந்தாகித் தேவர் ஏத்த அங்கம் பயந்த அறிவனாய அறப்படைமூன்

றாய்ந்தானடி அடைவா மன்றே”

வெழுசீர் ஆசிரிய விருத்தம் முதலாக உடையனவற்றில் மேற் சொன்ன பெற்றி அன்றியேயும் நாலசைச்சீர் வந்தன பிறவெனின், அகத்தியனார் ஆணையாற் செய்யப்பட்ட நூல்கள் எல்லாம்