உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/505

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

488

இளங்குமரனார் தமிழ் வளம் – 13

(குறள் வெண்பா)

“இருபன் னிரண்டென்பர் ஏனையார் ; ஈண்டை

ஒருபன் னிரண்டே துணிவு”

என்பவாகலின்.

இனி, நேர்பு அசை இரண்டெழுத்தாகக் கொள்ளுமிடத்து ஐந்தெழுத்தடி முதலாகப் பதினாறெழுத்தடிகாறும் உயரப் பன்னிரண்டு அடியாம்.

66

என்னை?

(குறள் வெண்பா)

"நேர்பீ ரெழுந்தாங்கால் ஐந்தாதி ஈரெட்டுச் சேர அடிபன் னிரண்டு"

என்பவாகலின்.

நிரையசையும் நிரைபு அசையும் இரண்டெழுத்தாய வழி, ஐந்தெழுத்தடி முதலாகப் பதினேழெழுத்தடிகாறும் உயர்ந்து, ஒரோ ஒன்று பதின்மூன்றாக இரண்டுமாக இருபத்தாறாம்.

66

என்னை?

(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)

"நிரையும் நிரைபும் இரண்டெழுத் தாங்காற்

புரைதீரைந் தாதி பதினே ழுயர்வாய்

இயையும் இருபதின்மேல் ஆறு”

என்பவாகலின்,

நிரையசையும் நிரைபு அசையும் 'புளிமா' என்னும் சீரேயாகுதலால் அலகு நிலையாற் பதின் மூன்றேயாகக்

கொள்க.

என்னை?

(குறள் வெண்பா)

“இருபதின்மேல் ஆறென்பர் ஏனையார் ; ஈண்டை

ஒருபதின்மேல் மூன்றே துணிபு

என்பவாகலின்.

இனி நிரைபு அசை மூன்றெழுத்தாயவழி, ஆறெழுத்தடி முதலாகப் பதினெட்டெழுத்தடிகாறும் உயர்ந்த பதின்மூன்று அடியாம்.

என்னை?