உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/506

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யாப்பருங்கலம்

(நேரிசைச் சிந்தியல் வெண்பா)

“புரைதீரா பதினெட் டுயர

நிரைபு பதின்மூன்றா நேரப் - புரைதீர்ந்த மூவெழுத்தாங் காலை முடிவு

என்பவாகலின்.

489

நேர் அசையும் நேர்பு அசையும் ஓரெழுத்தும் ஈரெழுத்துமா ஆங்கால், இருபத்து நான்கடி ஆக்கின; நிரை அசையும் நிரைபு அசையும் ஈரெழுத்தும் மூவெழுத்துமா ஆங்கால், இருபத்தாறடி ஆக்கின. இவை எல்லாம் தலைப்பெய்ய, ஆசிரியத்துள் ஐம்பதடி அசைச்சீர் ஆயின.

என்னை?

66

(குறள் வெண்பா)

'ஆசிரி யத்துள் அசைச்சீர் அடித்தொகை நாட்டினர் ஐம்பது நன்கு

என்பவாகலின்.

99

இவை ஐம்பதும், மேற்சொன்ன இருநூற்று ஒருபத்தோரடி யும் தலைப்பெய்து எண்ண, ஆசிரிய அடித்தொகை இருநூற்று அறுபத்தொன்றாம்.

என்னை?

(குறள் வெண்பா)

66

அரில்தீர் அகவற் கடித்தொகை ஆய்ந்தார் இருநூற் றறுபத்தொன் றென்று

என்பவாகலின்.

இனி, வஞ்சிப்பாக் குறளடி மூன்றும், சிந்தடி மூன்றும், அளவடியுள் முதல் மூன்றும் பெற்ற ஒன்பது நிலமும், முச்சீர்க் கட்டளையாற் பெற்ற முச்சீரடியுமாய் வஞ்சி பத்து நிலமும் பெற, அவையும் ஆசிரிய அடியுள்ளே அடங்கும் என்பது.

என்னை?

(குறள் வெண்பா)

“ஆசிரியம் பெற்ற அடிநிலமே வஞ்சிக்கும்

ஆகுமாஞ் சீராற் குறைத்து”

என்பவாகலின்.