உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/507

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

490

இளங்குமரனார் தமிழ் வளம் – 13

வெண்பாவிற்கு உரிய இருநூற்று முப்பத்திரண்டு அடியும் ஆமாறு சொல்லுமிடத்து, இயற்சீர் பத்தும் தன்சீர் நான்குமாய், வெண்பாவிற்குப் பதினான்கு சீருமாம்.

என்னை?

(குறள் வெண்பா)

“வெள்ளைக் கியற்சீர் பத்துந்தன் சீரொரு

நான்குமாக் கொள்வர் குறித்து என்பவாகலின்.

அவை நான்கு நிலைமையவாம்: இரண்டெழுத்துச் சீரும், மூன்றெழுத்துச் சீரும், நான்கெழுத்துச் சீரும், ஐந்தெழுத்துச் சீரும் என.

66

என்னை?

(குறள் வெண்பா)

இரண்டெழுத்தும் மூன்றெழுத்தும் நான்கெழுத்தும் ஐந்தும் திரண்டே எழுத்துச்சீர் ஆம்

என்பவாகலின்.

வெண்பாவிற்குச் சொல்லப்பட்ட பதினான்கு சீருள்ளும் தேமாவும், பாதிரியும், போதுபூவும், போரேறும் என்னும் நான்கு சீரும் ஈரெழுத்துச் சீராம்.

என்னை?

(குறள் வெண்பா)

"தேமாவே பாதிரி போதுபூப் போரேறென் றாகுமாம் ஈரெழுத்துச் சீர்’

என்பவாகலின்.

அவற்றுள், ‘தேமா’ எட்டெழுத்தடி முதலாகப் பதினாறெழுத் தடிகாறும் உயர்ந்த ஒன்பதடியும் பெற்ற ஒன்பதேயாம்.

என்னை?

(குறள் வெண்பா)

“தேமாவெட் டாதி பதினா றுயர்த்தெண்ண

ஆமாகும் ஒன்ப தடி

என்பவாகலின்.

ஒழிந்த பாதிரியும், போதுபூவும், போரேறும் என்றிவை மூன்றும் ஏழெழுத்தடி முதலாகப் பதினைந்தெழுத்தடிகாறும் உயர்ந்த ஒரோ ஒன்று ஒன்பதாக, இருபத்தேழடியாம்.

என்னை?