உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/509

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

492

இளங்குமரனார் தமிழ் வளம் – 13

உயர்ந்த ஒன்பதடியும் ஏற, ஒரோ ஒன்றுக்கு ஒன்பது அடியாக, அறுபத்து மூன்று அடியாம்.

என்னை?

(குறள் வெண்பா)

66

“ஏனை எழுசீரும் எட்டாதி ஈரெட்டாய்

ஏறத்தாம் ஏழொன்ப தாம்

என்பவாகலின்.

மூவெழுத்துச் சீராயவழி, வெள்ளைக்கு அடித்தொகை

எண்பத்து மூன்று.

என்னை?

(குறள் வெண்பா)

“மூவெழுத் தாம்வழி வெள்ளைக் கடித்தொகை எண்ணுங்கால் எண்பத்து மூன்று”

என்பவாகலின்.

வெள்ளைக்கு நான்கெழுத்துச் சீராவன, கணவிரியும், பூமருதும், கடியாறும், மழகளிறும், மாபடுவாயும், விறகு தீயும், புலிசெல்வாயும் என இவ்வேழு சீரும்.

என்னை?

(இன்னிசை வெண்பா)

“கணவிரி பூமருது கார்க்கடி யாறு

மழகளிறு மாபடுவாய் வாய்ந்த விறகுதீக் கொள்ளப் புலிசெல்வா யோடு குறித்தேழு வெள்ளைக்கு நான்கெழுத்துச் சீர்’

என்பவாகலின்.

அவற்றுள், பூமருதும், மாபடுவாயும், என இரண்டு சீரும் ஒன்பது எழுத்தடி, முதலாகப் பதினாறு எழுத்தடிகாறும், உயர்ந்த ஒரோ ஒன்றிற்கு எட்டாக, இரண்டுமாய்ப் பதினாறு அடியாம்.

என்னை?

(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)

66

“நன்பால பூமருது மாபடுவாய் என்றிரண்டும ஒன்பான் முதலாய்ப் பதினா றெழுத்தேற வந்த அடிபதினா றாம்

என்பவாகலின்.