உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/510

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யாப்பருங்கலம்

493

ஒழிந்த கணவிரியும், கடியாறும், மழகளிறும், விறகு தீயும், புலிசெல்வாயும் என இவ்வைந்தும் எட்டெழுத்தடி முதலாகப் பதினாறெழுத்து அடிகாறும் உயர்ந்த ஒன்பது அடியும் ஒரோ ஒன்றிற்கு ஒன்பதாக ஐந்திற்குமாய் நாற் பத்தைந்து அடியாம்.

என்னை?

(குறள் வெண்பா)

66

ஏனையைந் தெட்டு முதற்பதி னுாறுயர ஆன அடிநாற்பத் தைந்து

என்பவாகலின்.

99

நாலெழுத்து ஆயவழி, வெள்ளைக்கு அடித்தொகை அறுபத்தொன்று.

என்னை?

(குறள் வெண்பா)

“நாலெழுத் தாம்வழி வெள்ளைக் கடித்தொகை ஆகும் அறுபதின்மேல் ஒன்று

என்பவாகலின்.

99

வெண்பாவிற்கு ஐந்தெழுத்துச் சீராவன, மழகளிறும், புலிபடுவாயும் என இவை.

என்னை?

(குறள் வெண்பா)

“மழகளிறு வாய்ந்த புலிபடுவாய் என்ப அளவியன்ற ஐந்தெழுத்தாம் சீர்”

என்பவாகலின்.

இவை இரண்டும் ஒன்பது எழுத்தடி முதலாகப் பதினைந் தெழுத்தடிகாறும் உயர, ஒரோ ஒன்றிற்கு எட்டாகப் பதினாறு அடியாம்.

என்னை?

(குறள் வெண்பா)

“எட்டாதி மூவைந் தெழுத்துயர அச்சீராற் பட்ட அடிபதி னாறு

“ஒன்பான் முதலாக ஐந்தெழுத்துச் சீரிரண் டாய அடிபதி னாறு

என்பவாகலின்.

99