உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/512

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

யாப்பருங்கலம்

(குறள் வெண்பா)

"இரண்டொன்ப தாயினும் இவ்விரண்டும் கூட்டித் திரண்டொன்ப தாகச் செயல்”

என்பவாகலின்.

495

நேர்பசை ஈரெழுத்துச் சீராம்வழி எட்டெழுத்து அடி முதலாகப் பதினாறெழுத்து அடிகாறும் உயர்த்தெண்ண ஒன்பது அடியாம்.

என்னை?

(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)

“நேர்பசை ஈரெழுத் தாம்வழிச் சீரிதின்

எட்டாதி ஈரெட்டுயர்த்தெண்ண ஆமென்றாங்

கொட்டினார் ஒன்ப தடி

என்பவாகலின்.

இனி, நிரை அசையும் நிரைபு அசையும் ஈரெழுத்தாய வழி ஏழெழுத்தடி முதலாகப் பதினைந்தெழுத்தடிகாறும் உயர்த் தண்ண ; ஒரோ ஒன்று ஒன்பதாக, இரண்டுமாய்ப் பதி னெட்டடியாம்.

66

என்னை?

(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)

"நிரையும் நிரைபும் இரண்டெழுத்தாங் காலைப்

புரைதீரே ழாதி பதினைந் துயர

உரைசாலீ ரொன்ப தடி

என்பவாகலின்.

இரண்டும் 'புளிமா' என்னும் சீரே ஆகுதலால், இரண் டினையும் ஒன்பதாகக் கொள்க.

என்னை?

(குறள் வெண்பா)

66

இரண்டு புளிமாவென் றெண்ணினார் ஆய்ந்து திரண்டொன்ப தாகச் செயல்”

என்பவாகலின்.

இனி, நிரைபு அசை மூவெழுத்துச் சீராமிடத்து எட் டெழுத்தடி முதலாகப் பதினாறெழுத்து அடிகாறும் உயர, ஒன்பது அடியாம்.

என்னை?