உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/513

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

496

66

இளங்குமரனார் தமிழ் வளம் – 13

(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)

வைத்த நிரைபசை மூவெழுத்துச் சீராங்கால் எட்டு முதலாப் பதினா றுயர்த்தெண்ண

ஒட்டினார் ஒன்ப தடி

என்பவாகலின்.

99

வெண்பாவினுள் நான்கு அசையும் அசைச்சீராய் நின்று ஆக்கின அடித்தொகை முப்பத்தாறாம்.

என்னை?

(குறள் வெண்பா)

"வெள்ளைக் கசைச்சீரால் ஆகும் அடித்தொகை கொள்ளுங்கால் முப்பதின்மேல் ஆறு

என்பவாகலின்.

இவையெல்லாம் தலைப்பெய்து எண்ண, வெண்பா

அடித்தொகை இருநூற்று முப்பத்திரண்டு.

என்னை?

(குறள் வெண்பா)

"தெரியுங்கால் வெள்ளைக் கடித்தொகை செப்பல்

இருநூற்று முப்பத் திரண்டு”

என்பவாகலின்.

இனி, கலிக்குரிய சீரால் அடி ஆமாறு: வெண்பா உரிச்சீர் நான்கும், ‘நீடுகொடி, குழறுபுலி' என்னும் இரண்டு ஆசிரிய உரிச்சீரும், இயற்சீர் பத்தினுள்ளும் ‘தேமா, புளிமா’ என்னும் இரண்டு நேரீற்று இயற்சீரும் ஒழித்து ஒழிந்த எட்டு இயற் சீருமாய், பதினான்கு சீரும் கலிக்குரியவாம்.

என்னை?

(நேரிசை வெண்பா)

“திரியேறு பூமாசேர் வாயாத் திரிந்து

மருதுகொடி மாவருவா யாறு - விரிதீப்

புலிசேர ஆகும் புலிகளிறு வந்து

புலிவருமா யாங்கலியுட் புக்கு

என இதனை விரித்து உரைத்துக் கொள்க. “வெண்பா உரிச்சீர் ஒருநான்கும் ஆசிரியத்

தின்பா உரிச்சீருள் ஓரிரண்டும் திண்பா