உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/514

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யாப்பருங்கலம்

இயற்சீரின் எட்டினோ டீரேழு சீரும் உரைப்பர் கலிக்குரிமை உய்த்து

என்பவாகலின்.

அவை நான்கு நிலைமையவாம்.

என்னை?

(குறள் வெண்பா)

497

“உய்த்துரைத்த ஈரேழும் நான்கு நிலைமையால் வைத்துரைப்பர் நன்குணர்ந் தோர்”

என்பவாகலின்.

நான்கு நிலைமையாவன: ரண்டெழுத்துச் சீரா

கலும்,

மூன்றெழுத்துச் சீராகலும், நான்கெழுத்துச் சீராகலும், ஐந்தெழுத்துச் சீராகலும் என இவை.

என்னை?

(குறள் வெண்பா)

66

'திரண்டவை நானிலைமை செப்பில் எழுத்தோர் இரண்டொடு மூன்றுநான் கைந்து'

என்பவாகலின்.

அவற்றுள் ‘பாதிரி, போதுபூ, போரேறு' என்னும் இம் மூன்றும் ஈரெழுத்தாம்வழிப் பதின்மூன்று எழுத்தடி முதலாகப் பதினேழெழுத்து அடிகாறும் உயர்ந்த ஐந்தடியும் ஒரோ ஒன்றிற்கு ஐந்தாக, மூன்றுமாய்ப் பதினைந்தடியாம்.

என்னை?

(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)

“பாதிரி போதுபூப் போரேறென் றிம்மூன்றும் ஆதி பதின்மூன்றாய்ப் பத்தின்மேல் ஏழுயர் வாகும் பதினைந் தடி

என்பவாகலின்.

99

இனி, மூவெழுத்துச் சீராய் கலியுள் நடப்பன, ‘பாதிரி, போதுபூ, விறகுதீ, போரேறு, பூமருது, கடியாறு, நீடு கொடி, மாசெல்வாய், மாபடுவாய்' என்னும் இவ்வொன்பது சீரும் எனக் கொள்க.

என்னை?

(பஃறொடை வெண்பா)

“பாதிரி போதுபூப் பாய விறகுதீப்

போரேறு பூமருது பூங்கடியா றோதிய