உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/516

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யாப்பருங்கலம்

(பஃறொடை வெண்பா)

“நலமிகு நாலெழுத் தாயவழி நல்லாய்! கணவிரி கார்க்கடி யாறு விறகுதீப் பூமருது நீடு கொடியே புலிசெல்வாய் மாபடு வாயே மழகளிறு தாவில் குழறுபுலி என்றார் குறித்து

என்பவாகலின்.

அவற்றுள்

499

கணவிரி, கடியாறு மழகளிறு என்னும்

மூன்றும் பதினான்கு எழுத்தடி முதலாகப் பத்தொன்பது எழுத்தடிகாறும் உயர்ந்த ஆறு அடியும் பெற, ஒரோ ஒன்று ஆறாக, மூன்றுமாய்ப் பதினெட்டடியாம்.

என்னை?

(இன்னிசை வெண்பா)

"கணவிரியும் கண்ணார் கடியாறும் ஏனை

மழகளிறும் நாலெழுத்துக் கொள்ளும் இயல்வகையா

ஈரேழ் முதலாக ஈரொன்பான் மேலொன்று

சேர அடிபதி னெட்டு”

என்பவாகலின்.

மாபடுவாய் பதினான்கு எழுத்து அடி முதலாகப் பத்தொன்பது எழுத்து அடிகாறும் உயர, ஆறடியாம்.

என்னை?

(குறள் வெண்பா)

"மாபடுவாய் பத்தின்மேல் நான்காதி பத்தொன்ப தேற அடியிருமூன் றாம்”

என்பவாகலின்.

புலிசெல்வாய் பதின்மூன்று எழுத்தடி முதலாகப் பத்தொன்பது எழுத்து அடிகாறும் உயர, ஏழடியாம்.

என்னை?

(குறள் வெண்பா)

“பத்தின்மேல் மூன்று முதலாகப் புலிசெல்வாய்

பத்தொன்ப தேறவே ழாம்”

என்பவாகலின்.

‘விறகுதீ, பூமருது, நீடுகொடி, குழறுபுலி' என்னும் நான்கும் பதினைந்து எழுத்தடி முதலாகப் பத்தொன்பது எழுத்து அடிகாறும் உயர்ந்த ஐந்தடியும் பெற, நான்குமாய் இருபதாம்.

என்னை?