உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/517

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

500

இளங்குமரனார் தமிழ் வளம் – 13

(குறள் வெண்பா)

“ஏனைநான் கைம்மூ வெழுத்தாதி பத்தொன்ப தேற அடியிருப தாம்”

என்பவாகலின்.

நான்கெழுத்தாம்வழிக் கலியடித் தொகை ஐம்பத்

தொன்று.

என்னை?

(குறள் வெண்பா)

“நாலெழுத் தாங்கால் கலியின் அடித்தொகை ஆயுங்கால் ஐம்பதின்மேல் ஒன்று'

என்பவாகலின்.

இனி, கலிக்குரிய ஐந்தெழுத்துச் சீராவன : ‘மழகளிறு, புலிபடுவாய், குழறுபுலி' என்னும் இவை.

என்னை?

(குறள் வெண்பா)

“மழகளிறு வாய்ந்த புலிபடு வாயே

குழறுபுலி ஐந்தெழுத்துச் சிர்”

என்பவாகலின்.

அவற்றுள் குழறுபுலி பதினாறு எழுத்தடி முதலாக இருபதெழுத்து அடிகாறும் உயர்த்து எண்ண, ஐந்தடியாம்.

என்னை?

(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)

"கோதில் சிறப்பிற் குழறு புலியென்ப

தீரெட்டி னாதி இருப துயர்த்தெண்ண

ஆகும் அடித்தொகை ஐந்து

என்பவாகலின்.

மழகளிறு பதினைந்து எழுத்தடி முதலாக இருபது எழுத்தடிகாறும் உயர்த்தெண்ண ஆறடியாம்.

என்னை?

(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)

"மாசில் சிறப்பின் மழகளி றென்னுஞ்சீர்

மூவோரைந் தாதி இருப துயர்த்தெண்ண ஆயின ஆறடி ஆய்ந்து’

என்பவாகலின்.

99