உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/518

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யாப்பருங்கலம்

501

புலிபடுவாய் பதினான்கு எழுத்தடி முதலாக இருபது எழுத்தடி காறும் உயர்த்தெண்ண. ஏழடியாம்.

என்னை?

(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)

“பொற்பமைந்தார் சொன்ன புலிபடுவாய் என்னுஞ்சீர் பத்தின்மேல் நான்கு முதலிருப தீறாக

ஒத்தமைந்த ஓரேழ் அடி

என்பவாகலின்.

ஐந்தெழுத்தாம்வழிக் கலியின் அடித்தொகை பதி

னெட்டு.

என்னை?

(குறள் வெண்பா)

66

“ஐயெழுத் தாயவழி ஆன்ற கலியடி

எய்துங்கால் ஈரொன்ப தாம்”

என்பவாகலின்.

இனி, கலியடியெல்லாம் கூட்டி கூட்டி எண்ண நூற்று முப்பத்திரண்டு அடியாம்.

என்னை?

(குறள் வெண்பா)

66

“கருதுங்கால் ஆய்ந்த கலியடி எல்லாம்

ஒரு நூற்று முப்பத் திரண்டு’

என்பவாகலின்.

கலியடியுள் அசைச்சீராயின இல்லையென்று உணர்க.

ஆசிரிய அடி இருநூற்று அறுபத்தொன்று; வெண்பா

அடி இருநூற்று முப்பத்திரண்டு ;

கலியடி

நூற்று முப்பத்திரண்டு; ஆக அறுநூற்று இருபத்தைந்து அடியாம்.

என்னை?

(நேரிசை வெண்பா)

"இருநூற் றிருமுப்பத் தொன்றகவற் கேனை

இருநூற்றோ டெண்ணான்கு வெள்ளைக் - கொருநூற்று

முப்பத் திரண்டாம் முரற்கைக் கிவையறு நூற்

றற்றமில் ஐயைந் தடி

என்பவாகலின்.

99

யா. வி. 49. மேற்.