உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/520

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யாப்பருங்கலம்

(குறள் வெண்பா)

“ரகரவடி வாமீ திலகு; குருவே நிகரில் டகாரமென நேர்

என்றாராகலின்.

66

(நேரிசை வெண்பா)

'குற்றெழுத்துச் செவ்வி லகுவாகும் ; நெட்டெழுத்தும் குற்றொற்றும் நெட்டொற்றும் கோணமாய்த் - தெற்றக் குருவென்ப தாகும் ; குறிலும் குருவாம்

ஒருகால் அடியிறுதி உற்று'

எனவும்,

(குறள் வெண்பா)

  • “குறில்லகு வாகும் ; குருவாம் நெடிலும்

எனவும் சொன்னாராகலான்.

766

அவற்றிற்குச் செய்யுள்:

1“ஆதி நாதர்

பாத மூலம்

நீதி யாய்நின்

றோத நெஞ்சே!”

(வஞ்சித்துறை)

இது நாலெழுத்தடி அளவியற்சந்தம்.

66

பந்தம் நீக்குறில்

அந்தம் இல்குணத் தெந்தை பாதமே

சிந்தி நெஞ்சமே!”

இஃது ஐந்தெழுத்தடி அளவியற்சந்தம்.

66

“திரித்து *வெந்துயம்

முரித்து நல்லறம்

விரித்த வேதியர்க்

குரித்தென் உள்ளமே

இஃது ஆறெழுத்தடி அளவியற்சந்தம்.

(வஞ்சி விருத்தம்)

“பாடு வண்டு பாண்செயும்

நீடு பிண்டி நீழலான்

1. ஒற்று நீக்கி எழுத்தெண்ணிக் காண்க; பிறவும் அன்ன.

(பா. வே) *குருலகு ; குருவிலகு. *வெங்கயம்.

503

- யா. வி. 5. மேற்.