உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/526

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6

66

யாப்பருங்கலம்

(அறுசீர் விருத்தம்)

'அருண மாஞ்சினை கறித்துட னகன்பொழில்

அலவலைக் குயில்கூவத்

தருண வேனிலும் புகுந்தது தனுநெகத்

தடமலர்ச் சரபுங்கம்

கருண மூலமோ டுறநிறைத் திறைஞ்சினன்

கறைமிடற் றிறைநாட்டக்

கிரணந் தான்சுடக் கிரியிடைத் திருவுடம்

பிழந்துழல் கிழவோனே'

99

509

எனவும் இவை நான்கடியும் எழுத்தொத்துக் 'குரு லகு ஒவ்வாது வந்த அளவழிச்சந்தம். பிறவும் வந்தவழிக் காண்க.

66

(அறுசீர் விருத்தம்)

அருங்கயம் விசும்பிற் பார்க்கும் அணிச்சிறு சிரலை அஞ்சி இருங்கயம் துறந்த திங்கள் இடங்கொண்டு கிடந்த நீலம் நெருங்கிய மணிவிற் காப்ப நீண்டுலாய்ப் பிறழ்வ செங்கேழ்க் கருங்கயல் அல்ல கண்ணே எனக்கரி போக்கி னாரே”

(18)

(18)

(17)

16)

சிந்தாமணி. 626. வந்த

இஃது எழுத்தும், குருவும், இலகுவும் லகுவும் ஒவ்வாது அளவழிச்சந்தம். பிறவும் வந்தவழிக் கண்டு கொள்க. இனி. தாண்டகம் வருமாறு:

(எண்சீர் விருத்தம்)

“வானிலவி முகிலாப்ப மருவி மாண்பால்

மயிலினமாய் வந்துலவச் சுரும்பு பாடத்

தேனுலவு நறுமுல்லை *முறுவல் ஈனத்

திசைதிசையிற் றேந்தளவம் சிறந்து பூப்பக் கானிலவு மலிகொன்றை கனக ஞாலக்

கவினியவாய்ச் சார்ந்ததுகார் கலந்து கண்ணார் மானிலவு மடநோட்க்கின் நெடிய வாட்கண்

வனமுலையாய் ! மற்றுமனம் வருந்தல் நீயே”

ஃது இருபத்தேழெழுத்தடி அளவியற்றாண்டகம்.

1. குறில் ஒற்றடாது வந்தது லகு. குறில் ஒற்றடுத்தும் நெடில் ஒற்றடுத்தும் நெடில் தனித்தும் வந்தது குரு. இவ்வகையில் சீர்தொறும் ஒப்பிட்டு, ஒவ்வாது வந்தமை அறிக. ஒவ்வாது வருதல் அளவு அழிந்து வருதலாதலால் ‘அளவழிச் சந்த' மாயிற்று.

(பா. வே) *முறுவ லிப்பத்.