உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/528

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யாப்பருங்கலம்

தொல்லைக் கைம்மாச் செம்மற் றிண்டேர் துரகமொடு வயவர் அரவமிகு பரவை தொலையவரன் அழிய *நிலமைதுயர் அடைய இலங்கிய தோளினாய் !

எல்லைக் காலம் சொல்லிற் றீதாம்

எழுதுகொடி அனைய இடுகுமிடை ஒடிய

எழினிலவு கனகம் இனமணியோ டியைய

இணைந்தெழு கொங்கையாய்!”

து நாற்பத்தேழெழுத்தடி அளவியற்றாண்டகம்.

511

ஒழிந்த அளவியற்றாண்டகமும் வந்தவழிக் கண்டு கொள்க. இனி, அளவழித் தாண்டகத்திற் சில வருமாறு:

(எண்சீர் விருத்தம்)

66

மூவடிவி னாலிரண்டு சூழ்சுடரும் நாண

முழுதுலக மூடியெழில் முளைவயிர நாற்றித்

(30)

தூவடிவி னாலிலங்கு வெண்குடையி னீழற்

சுடரோய் ! உன் அடிபோற்றிச் சொல்லுவதொன் றுண்டால்:

(28)

சேவடிகள் தாமரையின் சேயிதழ்கள் தீண்டச்

சிவந்தனவோ? சேவடியின் செங்கதிர்கள் பாயப்

(29)

(28)

பூவடிவு கொண்டனவோ பொங்கொளிகள் சூழ்ந்து?

புலங்கொள்ளா வாலெமக்கெம் புண்ணியர்தம் கோவே"

சூளாமணி, 1904.

இஃது எழுத்தும் இலகுவும் ஒவ்வாது வந்த அளவழித் தாண்டகம். பிறவும் அன்ன.

6

சந்த அடியும் தாண்டக அடியும் விரவி ஓசை கொண்டு வந்தால், அவை சந்தத்தாண்டகம் என்றும், தாண்டகச் சந்தம் என்றும் வழங்கப்படும்.

என்னை?

(நேரிசை வெண்பா)

“சந்தச் 'சரணமும் தாண்டகத்தின் 2பாதமும் வந்து மயங்கி வழுவிகந்த - செந்தமிழ்நர் ஈண்டு வடநூற் புலவர் இயற்சந்தத் தாண்டகம் என்றுரைப்ப தாம்

என்பவாகலின்.

1,2. அடி.

(பா. வே) *நிலைமைதுயர்.