உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/529

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

512

இளங்குமரனார் தமிழ் வளம் – 13

அவற்றுட் சில வருமாறு:

(எண்சீர் விருத்தம்)

766

அங்குயிலின் அவிரொளியால் அருண மாகி அணியாழி மரகதத்தாற் பசுமை கூர்ந்து மங்கலஞ்சேர் நூபுரத்தால் அரவம் செய்யும்

(28)

(27)

(27)

(26)

மலரடியை மடவன்ன மழலை ஓவாச் செங்கமல வனமென்று திகைத்த போழ்தில்

தேமொழியால் தெருட்டுதியோ, செலவி னாலோ? தொங்கலம்பூங் கருங்கூந்தற் சுடிகை நெற்றிச்

சுந்தரி ! நிற் பணிவார்க்கென் துணிவு தானே!

wm.9. 15. CLDÝ. இதனுட் சந்த அடியும் தாண்டக அடியும் மயங்கி வந்தவாறு கண்டு கொள்க. பிறவும் அன்ன.

இனி, ஒரு சாரர், சந்த அடி, பலவாய் வருவனவற்றைச் ‘சந்தத் தாண்டகம்' என்றும், தாண்டக அடி பலவாய் வருவன வற்றைத் ‘தாண்டகச் சந்தம்' என்றும், சந்த அடியும் தாண்டக அடியும் ஒத்து வருவனவற்றைச் ‘சமசந்தத் தாண்டகம்' என்றும் வழங்குவர். அவை வந்தவழிக் கண்டு கொள்க.

சய

நான்கடியும் ஒத்து வருவனவும், நான்கடியும் ஒவ்வாது வருவனவும், இரண்டடி ஒத்து நான்கடியால், வருவனவும், பிறவாற்றால் வருவனவும்; மாராச்சையும், மிச்சாகிருதியும் முதலாகிய சாதியும்; ஆரிடமும், பிரத்தாரமும் முதலாகிய ஆறு பிரத்தியமும்; பிங்கலமும், மாபிங்கலமும், தேவமும், ஞானசாரியமும், சந்திரகோடிச்சந்தமும், மயூரத் திரிசந்தமும், மேடகத்திரிசந்தரும் முதலாகிய சந்தோபிசிதிகளுள்ளும்; பாட்டியல் மரபு, மாபுராணம் முதலாகிய தமிழ் நூலுள்ளும் தகுதியுடையார்வாய்க் கேட்டுக் கொள்க. அவை ஈண்டு உரைப்பிற் பெருகும்.

சந்தமும் தாண்டகமும் என்ற இவற்றுக்கு எழுத்து எண்ணுகின்றுழிக் குற்றுகர இகரங்களை எழுத்தாகவே

கொண்டு எண்ணுக.

இனி, காக்கை பாடினியாரும், பாட்டியல் உடையாரும், வாய்ப்பியம் உடை உடையாரும் முதலாகிய ஒருசார் ஆசிரியர், இவற்றையும் இனத்தின் பாற்படுத்து வழங்குவர். தொல்காப்பியனார் முதலாகிய ஒரு சார் ஆசிரியர்,

1. இருபத்தேழு எழுத்து முதலாக உயர்ந்த எழுத்தடியின தாண்டகம். நாலெழுத்து முதல் இருபத்தாறு எழுத்தின்காறும் உயர்ந்த இருபத்துமூன்று அடியும் சந்தம். ஆகலின் முதல் மூன்று அடிகளும் தாண்டகமும் ஈற்றடியொன்றும் சந்தமுமாதலறிக.