உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/530

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யாப்பருங்கலம்

513

இவற்றையும் மேற்கூறப்பட்ட பாவினங்களையும் கொச்சகக் கலிப்பாற்படுத்து வழங்குவர் எனக் கொள்க.

இனி, ஒருசார் வடநூல்வழித் தமிழாசிரியர், ‘ஒரு புடை ஒப்புமை நோக்கி இனமெனப்படா ; மூவகைப்பட்ட விருத்தங்களுள்ளும், சந்தத் தாண்டகங்களுள்ளுமே பட்டு அடங்கும்,' என்பர். இந் நூலுடையார், காக்கை பாடினியார் முதலாகிய ஒரு சார் ஆசிரியர் மதம் பற்றி எடுத்து ஓதி, இவையும் உடன்பட்டாரெனக் கொள்க.

என்னை?

(நேரிசை வெண்பா)

“ஒருபுடையால் ஒப்புரைப்பின் மற்றுமோர் பாவிற் கொருபுடையால் ஒக்குமா றுண்டாம் ; இருபுடையும் ஒப்பித்துக் கோடுமோ, ஒன்றிற்கே சார்த்துமோ, எப்பெற்றிக் கோடும் இனம்

து கடா.

766

(கலி விருத்தம்)

குன்றி ஏய்க்கும் உடுக்கையென் றாற்கரி தென்று மோ, சிவப் பென்றுமோ, அவ்விரண் டொன்றி நின்றவென் றோதுது மோ?" எனின், நின்ற தோர் வரலாற்றொடு நிற்குமே

இது விடை.

(நேரிசை வெண்பா)

"வெள்ளைக்குச் செப்பல் அகவற் ககவலே துள்ளலே தூங்கல் கலிவஞ்சிக் - குள்ளாகும் தொன்னூற் புலவர் துணிவெனிற் பாவினமும்

சொன்னூற் புலவர் துணிபு"

இனி, செய்யுள்களுக்கு வருணம் முதலாயின சொல்லுமாறு:

(நேரிசை வெண்பா)

“தெய்வம் துணையிராசி பக்கம் திணைபொழுது

பொய்யில் புகைவண்ணம் பூச்சாந்து - மையில்கோள்

நாள்கதி சாதி கிழமைநாள் நன்கமையப்

பாற்படுக்க பானான்கின் பால்'

“வெண்பா முதலாக வேதியர் ஆதியா

மண்பால் வகுத்த வருணமாம்; -ஒண்பா

1. குறுந்தொகை ; கடவுள் வாழ்த்து.