உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/545

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

528

இளங்குமரனார் தமிழ் வளம் – 13

இதனுட் பதினாறும், பதினைந்தும், பதினான்கும், பதின் மூன்றும் எழுத்து வந்தன.

ஒன்பதும், பத்தும், பதினொன்றும், பன்னிரண்டும் ஆகிய எழுத்தான் வந்த முச்சீரடி வஞ்சிப்பா வந்தவழிக் கண்டுகொள்க.

எல்லா அடிகளும் எழுத்து ஒத்து வரும் கலிகளைக் ‘கட்டளைக்கலி’ என்றும், ஒவ்வாது வருவனவற்றைக் ‘கலம் பகக்கலி' என்றும் வழங்குவர். இவ்வாறே ‘கட்டளை ஆசிரியம்', 'கலம்பக ஆசிரியம்' என்றும்; 'கட்டளை வஞ்சி’, ‘கலம்பக வஞ்சி' என்றும் வழங்கப்படும்.

66

(கலி விருத்தம்)

கட்டளை கலம்பகம் சமநடை சமவியம் மட்டவிழ் குழலினாய் ! மயூர சமவியம் ஒட்டினார் எழுத்தினால் ஒட்டி ஒண்டமிழ்க் கிட்டமா யவர்கள்வெண் பாவின் பேர்களே இதனை விரித்து உரைத்துக்கொள்க.

இனி, இருபது எழுத்தின் மிக்க நாற்சீரடிப் பாவினம்

வருமாறு:

(தரவுக் கொச்சகம்)

'கொடிகொடியொடு மிடைவனவுள குடைகுடையொடு

கடிநறுமலர் சொரிவனவுள் கடிமதிலுள கவரியுமுள குடைமிசையுள அடிவழிபடும் அமரருமுளர் *அருளொளிவள ரரியணையுள இடிமுரசமும் அதிர்வனவுள இனிதினிதவ ரதுதுறவுமே

என வரும்.

இனிச் சந்தங்கட்கும் தாண்டகங்கட்கும் பிரத்தாரம் முதலாகிய ஆறு 'பிரத்தியமும் சொல்லப்படும்.

என்னை?

(நேரிசை வெண்பா)

“சந்தமும் தாண்டகமும் தம்முள் எழுத்திலகு வந்த முறைமை வழுவாவேல் - முந்தை அளவியலாம் என்றுரைப்பர் ; அவ்வாறன் றாகில் அளவழி யாமென்ப ரால்”

இதனை விரித்து உரைத்துக்கொள்க.

1.

இலக்கணம். பிரத்தாரம் முதலிய இலக்கணத்தை வீரசோழியம் 130 காண்க. (பா. வே) *அருளாழியொ டரியணை யுள. (மு. ப. இ. ப)

- யா. வி. பக். 476.

137 காரிகைகளில்