உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/546

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யாப்பருங்கலம்

அளவியற்சந்தத்திற்கும்

529

அளவியற்றாண்டகத்திற்கும் 'பிரத்தாரமும் நட்டமும் உத்திட்டமும், ஒன்று இரண்டு மூன்று என்னும் முறைமையான் ஏறச் சொன்ன இலகு செய்கையும் எண்ணும் அலகிட்டு, நில அளவையும் என்னும் வ்வாறு பிரத்தியமும் சொல்லப்படும்.

266

பிரத்தரிக்கும்படி:

குருக்கீழ் இலகுவாம் ஏனைய ஒப்பாம் குருத்தொகையாம் ஆதிக்கட் கூறு”

இது பிரத்தரிப்பதற்கு இலக்கணம்.

யா.வி. பக். 507.

‘பிரத்தாரம்’ எனினும், 'உறழ்ச்சி’ எனினும் ஒக்கும். ‘நட்டம்' என்பது, அவ்வாறு பிரத்தரிக்கப்பட்டனவற்றுள் இனைத்தாவது என்று அறிவதன் அலகு நிலை அறியேன் என்றால், சொல்லப்பட்ட பிரத்தார எண்ணினை அரை செய்து ஓர் இலகு வைத்துப் பாகஞ் செய்யப் போதாதவழி ஆண்டு ஓர் உருவிட்டுப் பாகம் செய்து, ஆண்டு ஒரு குரு இடுக. இவ்வாறே பிரத்தார அடி எழுத்துள்ளளவும் வைக்க.

அதற்கு இலக்கணம்:

(நேரிசை வெண்பா)

“இனைத்தாவ தென்றறிவன் ஈடறியேன் என்றால் அனைத்தரைசெய் தாண்டிலகு வைக்க - நினைத்தனை விள்ளத்தான் ஆகாதேல் வேறோர் *உருவிட்டுக் கொள்ளத்தான் ஆகும் குரு வீரசோ. 133. மேற்இ. இது நட்டத்திற்கு இலக்கணம். 'நட்டம்' எனினும் 'கேடு' எனினும் ஒக்கும்.

இனி, 'பிரத்தரித்ததன் அலகிருக்கை அறிவேன்; எனைத் தாவது என்று அதன் எண் அறியேன்' என்றால், அதன் பிரத் தாரத்தின்மேல் ஒன்று, இரண்டு, நான்கு, எட்டு, பதினாறு என்று இவ்வாறே ஒன்று முதலாக இரட்டித்தது முடிவளவும் ஏறவிட்டு, இலகுவின்மேல் நின்ற இலக்கங்களைக் கூட்டி, அதனோடு ஒரு குரு இட்டு, அதன் அளவினால் இனைத்தாம் விருத்தம் என்று சொல்லுக.

6

1. “ஒப்பா ருறழ்ச்சியும் கேடும் உத்திட்டமும் ஒன்றிரண்டெ னப்பா லிலகு குருச்செய் கையுமந்தச் சந்தங்களால்

2.

துப்பார் தொகையு நிலவ ளவுமென்று சொல்லிவைத்தார் செப்பார் தெளிவுக ளாறையும் சீறடித் தோமொழியே”

குருக்கீழ் இலகுவாம்ஏனைய தொக்கும்

குருத் தொகையும் ஆதிக்கட் கூட்டு.

(பா. வே) *அலகிட்டுக்.

- வீரசோ. 131.

வீரசோ. 132. மேற்