உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38

என

இளங்குமரனார் தமிழ் வளம் – 13

எழுவகை ஆசிரிய மதமாவன:

“உடன்படல், மறுத்தல்,

பிறர்தம் மதமேற் கொண்டு †களைதல், தாஅன் நாட்டித் தனாது *நிறுத்தல், இருவர் மாறுகோள் ஒருதலை துணிதல், பிறர் நூற் குற்றம் காட்டல், ஏனைப் பிறிதொடு படாஅன் தன்மதம் *கொளலே

வை.

இவ்வகையே புகுந்தன; புகுந்தன பரப்பி உரைப்பான் புகில், இகந்துபட்ட உரையிற்றாம்; எடுத்துக்கொள்ளப்பட்ட பொருளவற்றுள் யாதானும் ஒரு வகையாற் கேட்போர் உணர்வு புலன் கொள்ளுமாற்றால் எடுத்துக் கொண்ட சூத்திரப் பொருள் உரைக்க வேண்டும் என்பது ஈண்டுத் துணிபு. அஃது ஆமாறு:

‘வெறிகமழ்... யாப்பே' என்பது, ‘நறுநாற்றம் கமழும் தாமரைப் பூவின்மேல் நடந்த அறிவனை இறைஞ்சிச் சொல்லுவன் யாப்பு' என்றவாறு.

'இப்பொருளைச் சொல்லுமோ இச்சூத்திரத் தொடர் மொழி?' என்னில் சொல்லும். என்னை? 'வெறி' என்பது, 'நறுநாற்றம்' என்றவாறு: 'கமழ்' என்பது, 'நாறுதல்' என்ற வாறு; அது, ‘வெறிகமழ், சந்தனம்”. “வெறி கமழ் துழாய்' என்றாற் போலக் கொள்க. 'தாமரை' என்றது, ‘தாமரைப்பூ’ என்றவாறு;

து

266

"முதலிற்கூறும் சினையறி கிளவி.

66

தொல். வேற். மயங். 31 'தாமரை புரையும் காமர் சேவடி' குறுந்தொகை. கடவுள் வாழ்த்து.

وو

என்றாற்போலக் கொள்க. மீமிசை' என்பது, 'மேன்மேல்' என்றவாறு. "மீமிசை” என்பது, ஒரு பொருட்பன்மொழி சிறப்புப்பற்றி வந்தது. என்னை?

“ஒருபொருட் பன்மொழி சிறப்பினின் வழாஅ”

என்றாராகலின், அஃது,

66

'அடுக்கன் மீமிசை அருப்பம் பேணாது"

- நன்னூல். 398

மலைபடுகடாம். 19

என்றாற்போலக் கொள்க. ‘ஒதுங்கல்' என்பது, நடத்தல். அது,

1.

2.

இகந்துப்பட்ட – வரையறை கடந்த.

(பா. வே) முறையின் வைப்பே உலகமலை யாமை. †களைவே நிறுப்பே. வகுத்தல். முதலாகு பெயர்.