உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

யாப்பருங்கலம்

“போதியங் கிழவனை பூமிசை ஒதுங்கினை

99

39

சூளாமணி. இரத. 96

என்றாற்போலக் கொள்க. எல்லாப் பொருளையும் ஒரு கணத்திற்றானே அறிந்தமையால், ‘அறிவன்' என்பது காரணக் குறி ; ‘ஐ' என்பது இரண்டாம் வேற்றுமை. 'வணங்கி' என்பது, இறைஞ்சி' என்றவாறு. 'வணங்கி வணங்கி' எனினும், இறைஞ்சி' எனினும், ‘பணிந்து' எனினும் ஒரு தொழில் ‘அறைகுவன்’ என்பது ‘சொல்லுவன்' என்றவாறு. 'அறைகுவன்’ எனினும், 'மொழிகுவன்’ எனினும், 'சொல்லுவன்' எனினும் ஒக்கும். 'யாப்பு' என்பது, 'யாப்பு' என்னும் அதிகாரம் என்ற வாறு. 'யாப்பு' எனினும், 'பாட்டு' எனினும், ‘தூக்கு' எனினும், செய்யுள்' எனினும், ‘தொடர்பு' எனினும் ஒக்கும். ஏகாரம், தேற்றேகாரம்; ‘பிரிநிலை' எனினும், அமையும். என்னை?

"தேற்றம் வினாவே பிரிநிலை எண்ணே ஈற்றசை இவ்வைந் தேகா ரம்மே'

என்றாராகலின்.

தொல். இடை. 9

'வழிபடு தெய்வ வணக்கம் செய்து, மங்கல மொழி முதல் வகுத்து எடுத்துக் கொண்ட இலக்கண இலக்கியம் இடுக்கண் இன்றி இனிது முடியும்,' என்ப ஆகலின், இச்சூத்திரம் இவ்வாறு கூறப்பட்டது எனக் கொள்க. தெய்வ வாழ்த்து முதலிய செய்யுளுள்ளும்,

66

“ஆதியங் கடவுளை அருமறை *பயந்தனை போதியங் கிழவனை பூமிசை ஒதுங்கினை சேதியஞ் செல்வ! நின் றிருவடி *பரவுதும்

“காமனைக் கடிந்தனை காலனைக் *கடந்தனை தேமலர் மாரியை திருமறு மார்பினை மாமலர் வண்ண! நின் மலரடி வணங்குதும்’”

66

“ஆரருள் பயந்தனை ஆழ்துயர் *தவிர்த்தனை ஓரருள் ஆழியை உலகுடை ஒருவனை சீரருள் மொழியைநின் றிருவடி பரவுதும்

எனக் கொள்க.

பாயிரம் முற்றியது

1சூளாமணி. இரத. 96-98

1. இம்மூன்று வரிப்பாடல்களிலும் இரண்டாம் அடி மடக்கடியாக மீண்டும் வருதல் சூளாமணியில் காண்க.

(பா. வே) பகர்ந்தனை. *வணங்கினம். *காய்ந்தனை. *அவித்தனை. *தொழுதனம்.