உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உறுப்பியல் 1. எழுத்தோத்து

யாப்பு

௧. எழுத்தசை சீர்தளை அடிதொடை தூக்கோடு இழுக்கா நடைய தியாப்பெனப் படுமே.

'என்பது என் நுதலிற்றோ?' எனின், 'யாப்பாவது ன்னது,' என்று தொகுத்து உணர்த்துதல் நுதலிற்று.

-

இ ள்.) எழுத்தும், அசையும், சீரும், தளையும், அடியும் குற்றமின்றி நடைபெறுவது ‘யாப்பு' என்று சிறப்பித்துச் சொல்லப்படுவது என்றவாறு.

உம்மைகள் தொக்கன. 'ஒடு,' எண் ஒடு.

இவ்வேழுறுப்பினும் தீர்ந்து யாப்பு உண்டோ?' எனின், இல்லை. 'என் போல?' எனின், 'முப்பத்திரண்டு உறுப்பொடு புணர்ந்தது மக்கட் சட்டகம் சட்டகம் என்றால், முப்பத்திரண்டு உறுப்பினும் தீர்ந்து மக்கட்சட்டகம் இல்லை. அதுபோல எனக் கொள்க. அல்லதூஉம், பிறரும் கூறினர். என்னை?

“யாப்பெனப் படுவ தியாதென வினவின் தூக்கும் தொடையும் அடியுமிம் மூன்றும் நோக்கிற் றென்ப நுணுங்கி யோரே”

என்றார் நற்றத்தனார்.

1.

“இமிழ் கடல் வரைப்பின் எல்லையின் வழாஅத் தமிழியல் வரைப்பில் தானினிது விளங்கி யாப்பியல் தானே யாப்புற விரிப்பின்,

குழல், நெற்றி, புருவம், கண், காது, மூக்கு, இதழ், பல், முகம், கழுத்து, தோள், முன்னங்கை, உள்ளங்கை, கைவிரல், கைந்நகம், கொங்கை, கொங்கைக்கண், வயிறு, வயிற்றின் மயிரொழுக்கு, வயிற்று மடிப்பு, இடை, கொப்பூழ், குறி, தொடை, முழங்கால், கணைக்கால், புறங்கால், காற்பரடு, குதிகால், கால்விரல், கால்நகம், அடி என்பன முப்பத்திரண்டு உறுப்புக்களாம். திருவரங்கக் கலம்பகம். 56. சட்டகம் - உடல்.