உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/565

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

548

என

இளங்குமரனார் தமிழ் வளம் – 13

“மதியம் கெடுத்த வயமீன் எனத்தம்பி மாழாந் துதிதற் குரியாள் பணியால் உடனாய வாறும் நிதியின் னெறியின் அவன்றோ ழர்நிரந்த வாறும் பதியின் அகன்று பயந்தா ளைப்பணிந்த வாறும்”

சிந்தாமணி. பதிகம் 23.

நிரையசை முதலாய் வந்து, பதினைந்தெழுத்து

ஓரடிக்கண் வந்தவாறு கண்டு கொள்க.

66

(சந்தக் கலி விருத்தம்)

'அம்பொன் மாலை யார்க ளித்த லத்தெ ழுந்த ரத்தவாய்க் கொம்ப னார்கோ டுத்த முத்த நீர வாய கோழரைப்

பைம்பொன் வாழை செம்பொ னிற்ப ழுத்து வீழ்ந்த சோதியால் அம்பு பாய்ந்து வந்தொ சிந்து சாறு சோர்வ போலுமே

சூளாமணி 131. இந்தச் சந்தத்தால் நேரசை முதலாக வருவன ஒரோ அடியுள் பதினைந் தெழுத்தாயும், நிரையசை முதலாய் வருவன பதினா றெழுத்தாயும் வருதல் பெரும்பான்மைய எனக் கொள்க. “கவர்க திர்வ ரஃகிறுங்கு காய்க வின்ற எட்குழாம் துவரை கொட்ப யறுழுந்து தோரையோடு சூழ்கொடி அவரை யின்ன பல்லு ணாவ ளக்கரிய என்பவாற் கவரும்வண்டு சூழநின்று காந்தள்கை மறித்தவே

இது நிரையசை முதலாய்ப் பதினாறெழுத்தாயினவாறு கண்டு கொள்க.

“மாசில் கண்ணி மைந்த ரோடு மங்கை மார்தி ளைத்தலிற் பூசு சாந்த ழிந்தி ழிந்தி புள்ளி வேர்பு லர்த்தலால்

வாச முண்ட மாருதம் வண்டு பாட மாடவாய்

வீசி 'வெள்ளி லோத்தி ரப்பொ தும்பு பாய்ந்து விம்முமே"

-

சூளாமணி 134. இஃது இச்சந்தத்தால் வந்து, மூன்றாமடி எழுத்துக் குறைந்து வந்தது.

  • “தெய்வ நாறு காந்த ளஞ்சி லம்பு தேங்கொள் பூம்பொழில் *பவ்வ முத்த வார்ம ணற் பரம்பு மௌவல் மண்டபம் எவ்வ மாடு *நீர்ப்பொ ழில் இடங்க ளின்ப மாக்கலாற் கவ்வை யாவ தந்நகர்க் காம னார்செய் கவ்வையே'

-

சூளாமணி 136.

இதுவும் சந்தத்தால் வந்து, ஈற்றடி பதினான்கெழுத்தாய் வந்தது. இவ்வாறு எழுத்துக் குறைந்தும் மிக்கும் வருவனவற்றை அறிந்து, ‘நிசாத்து' என்றும், 'விராட்டு' என்றும், 'புரிக்கு' என்றும், ‘சுராட்டு' என்றும் பெயரிட்டு வழங்குக.

1. வெள்ளிலோத்திரம் - நறுமணமிக்க மலரையுடைய தொருமரம்,

(பா. வே) *தெய்வயாறு. *பௌவமுத்த. *நீரபோலி.