உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/566

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யாப்பருங்கலம்

549

நான்கடியும் எழுத்து ஒத்து வருவனவற்றைத் ‘தலையாகு சந்தம்' என்றும், ஓரெழுத்து மிக்கும் குறைந்தும் வருவனவற்றை இடையாகு சந்தம்’ என்றும், இரண்டெழுத்து மிக்கும் குறைந்தும் வருவனவனவற்றையும் பிறவாற்றான் மிக் கு குறைந்தும் வருவனவற்றையும் ‘கடையாகு சந்தம்' என்றும் வழங்குவர் ஒருசார் ஆசிரியர்.

தாண்டகங்கட்கும் இவ்வாறே சொல்லுவர்

ம்

இவற்றையெல்லாம் ஞானாசாரியமும், *சயதேவமும், மிச்சா கிருதியும்' பிங்கலமும், மாபிலங்கலமும், இரண மாமஞ்சுடையும், சந்திரகோடிச் சந்தமும் ‘குணகாங்கி’ என்னும் கருநாடகச் சந்தமும், வாஞ்சியார் செய்த வடுகச் சந்தமும் ஆகியவற்றுள்ளும், மாபுராணம் முதலாகிய தமிழ் நூலுள்ளும் தகுதி யுடையார்வாய்க் கேட்டுக் கொள்க. இவையெல்லாம் விகற்பித்து உரைக்கப் பெருகும்.

ஒருசார் வடநூல் வழித் தமிழாசிரியர், “குருவும் இலகுவும் புணர்ந்து முற்றவரினும், முற்றக் குருவேயாயும் முற்ற இலகு வேயாயும் வரினும், 'சமானம்' என்பதாம்; இலகுவும் குருவும் புணர்ந்து முறை வரிற் ‘பிரமாணம்' என்பதாம்; இரண்டு குருவும் இரண்டு இலகுவுமாய் முறையானே வரினும், இரண்டு இலகுவும் இரண்டு குருவுமாய் முறையானே வரினும், விதானம்' என்பதாம்,' என்பர்.

66

என்னை?

(நேரிசை வெண்பா)

குருலகுமுற் றாயும் குருவிலகு வேறாய் வருமெனினாம் தைமதீர் சமானம் ; - குருலகுவின் பிற்றான் வரிற்பிர மாணம் ; விதானமாம் என்றார் இரண்டாம் எனின்”

என்பவகாலின்

வரலாறு:

(கலி விருத்தம்)

“போது விண்ட புண்ட ரீக மாத ரோடு வைக வேண்டின் ஆதி நாதர் ஆய்ந்த நூலின் நீதி ஓதி நின்மின் நீடு”

எனவும்,

(பா. வே) சரணாச்சிரையும்.