உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/568

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யாப்பருங்கலம்

551

(வஞ்சித் துறை)

"பொருளாளிற் புகழாமென்

றருளாளர்க் குரையாயுந்

திருமார்பிற் சினனேயொன்

றருளாய்நின் அடியேற்கே”

இஃது இரண்டு குருவும் இரண்டு இலகுவும் முறையானே வந்தமையால், 'விதானச் செய்யுள்' எனப்படும்.

(வஞ்சி விருத்தம்)

“பூவார் பொய்கைப் பொற்போதில்

தேவார் செங்கட் சேயாநீ

யாவா வென்னா தென்னோசூர்

மாவா னானைக் கொன்றானே!"

இது முற்றக் குருவே வந்தமையால், சமானம்.

பிறவும் அன்ன. இவையெல்லாம் 'பிறவும்' என்றதனாற்

கொள்க.

செய்யுள் ஒத்துக் கரணம். முற்றும்

1. வண்ணமும் பிறவும் மரபுழி வழாமைத்

திண்ணிதின் நடத்தல் தெள்ளியோர் கடனே”

- யா.வி.95.