உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/576

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யாப்பருங்கலம்

செவ்வகத்து வேந்துந் தெரிந்திவற்றால் இவ்வகையே

ஆசிரியம் ஆக்கி அதனுட் கரந்துரைத்த

நேரிசை வெண்பா நினையுங்கால் பாரில்

'தருமலிந்த வண்மை தலைத்தந்து மிக்க திருமலிந்து தீதிலவே யாக - வுருமலிந்த வென்னரசன் மள்ளன் மதினிலை யேதிலர்க டுன்னரிய வெஞ்சினத்தான் றோள்"

எனக் கொள்க.

559

சக்கரத்திற்கும் 'திரிபாகிக்கும் எழுத்து எண்ணுகின்றுழி எல்லா எழுத்தும் கொள்ளப்படும்; அடிக்கு எழுத்து எண்ணுமாறு போலக் குற்றிகரக் குற்றுகரங்களும் ஒற்றும் ஆய்தமும் ஒழித்து எண்ணப்படா. திரிபாகிக்கும் அத்தொடக்கத்தன காள்க. சக்கரத்திற்குக் காட்டின பாட்டுள்ளும் கண்டு கொள்க.

இதனுட் ‘சக்கரம்' என்ற தனானே, ‘பூமிச் சக்கரமும், ஆகாயச் சக்கரமும், பூமியாகாயச் சக்கரமும், வட்டச் சக்கரமும், புருடச் சக்கரமும், சதுரச் சக்கரமும், கூர்மச் சக்கரமும், மந்தரச் சக்கரமும், காடகச் சக்கரமும், கலுபுருடச் சக்கரமும், சலாபச் சக்கரமும், சக்கரச் சக்கரமும், அரவுச் சக்கரமும் முதலாக வுடை

யன புணர்ப்பாவையுள்ளும், போக்கியத்துள்ளும், கிரணியத்துள்ளும், வதுவிச்சையுள்ளும் கண்டு கொள்க.

அவையெல்லாம் சாவவும் கெடவும் பாடுதற்கும், மனத்

தது பாடுதற்கும் பற்றாம் என்று கொள்க.

நான்கு

வரியும்

சுழிகுளமாவது, எட்டெழுத்தாய் முற்றுப் பெற்ற பாட்டு, முதலும் ஈறும் சுழித்து வாசித்தாலும் அப்பாட்டே ஆவது.

வரலாறு:

(வஞ்சித் துறை)

“அதிகமல மாகாவே

திண்ணிற மேர்போகா

கணிநீங்கு மார்மா

6

மறங்குவகு மேல'

எனவும்,

1.

மூன்றெழுத்துக்களைச் சேர்க்க ஒருமொழியாகவும் அதன்கணுள்ள முதலெழுத்தையும் இறுதி யெழுத்தையும் சேர்க்க மற்றொரு மொழியாகவும் இடையெழுத்தையும் கடையெழுத்தையும் சேர்க்கப் பின்னொரு மொழியாகவும் வருவது. திரி - மூன்று ; பாகி - பாகம் உடையது. மொழி - சொல். எ டு. காமாரி; காரி; மாரி.