உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/600

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யாப்பருங்கலம்

பழித்த மொழியான் இழித்துக் கூறல் தன்னான் ஒருபொருள் கருதிக் கூறல் இன்னா வகையின் மனங்கோ ளின்மை அன்னவை பிறவும் அவற்றினெறி யாகும்'

எனக் கொள்க.

583

“பாடுதல் மரபு' என்பது, குலனும் விச்சையும் ஒழுக்கமும் பிராயமம் என்றிவற்றிற்குத் தக்க வகையால், பாட்டுடைத் தலை மகனையும் அவன் சின்னங்களையுமே பாடுதலும், கிளவிப் பொருள் அல்லனவற்றொடு பாட்டுடைத் தலைமகனைப் பெயரும் ஊரும் முதலிய உறுப்புக்களைச் சேர்த்திப் பாடுதலும், தீயனவற்றை அவன் பகைவரைச் சார்த்திப் பாடுதலும் என இரண்டாம். அவையெல்லாம் பெரிய முப்பழம் முதலாயின வற்றுட் கண்டு கொள்க.

தாரணைப் பகுதியும்' என்பது, 'தாரணை விகற்பங்களும்'

என்றவாறு.

தாரணை

விகற்பங்களாவன, நாம தாரணையும், அக்கரத் தாரணையும், செய்யுட் ாரணையும், சதுரங்கத் தாரணையும், சித்திரத் தாரணையும், வயிரத் தாரணையும், வாயுத் தாரணையும், நிறைவு குறைவாகிய வெண்பொருட் L டாரணையும், வந்துத் தாரணையும் ஆயினவற்றை உருவக்கர சங்கேதங்களால் இடம்பட வறிந்து தரித்து, அனு அனுலோம் மாகவும் பிரதிலோமமாகவும் பிறவாறாகவும் சொல்லுவது. அவையெல்லாம் 'தாரணை நூலுட் கண்டு கொள்க.

சதுரங்க அறையில் உருவுகளை 2உருவக்கர சங்கேதங்களால் திரித்துக் குதிரையடியாகவும், குதிரையும் யானையுமாகவும் பாய்ந்து வருவதற்கு இலக்கணம் வருமாறு:

66

(நேரிசை ஆசிரியப்பா)

கடிகம ழிலைமலர் சீரிதழ்த் தாமரைப் பனிமலர் வாட்டிய மீமிசை நிகரினூ புரமிக வூன்றலின் மேலொளி நெருங்கிய சேண்விளங் கெழிலடி குறுகுதுந் தூநிறப் பெருமலர் வேங்கையு மூங்கிலு நுடங்கிப் பிணியவிழ் வீத்த மாத்த ணறவமும் சாந்தமு மகிலும் கிளர்ந்து தீங்கனிக்

1. சரிநிலையில் நிற்றல். 2. உருவு அக்கரம் சங்கேதம். அக்கரம் - எழுத்து. சந்கேதம்- குறியீடு.