உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/614

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யாப்பருங்கலம்

597

இனி, னி, எண் இரண்டு வகைய: கணிதமும் கரணமும் என. அவற்றுள் கணிதமாவன, பதினாறு வரி கருமமும், ஆறு கலாச வருணமும், இரண்டு பிரகரணச் சாதியும் முதகுப்பையும், ஐங்குப்பையும் என்ற இப் பரிகருமமும்; மிச்சிரகமும் முதலாகிய எட்டதிகாரமுமாம். அவை அவினந்த மாலையும், சட்டமும், வருத்தமானமும் முதலியவற்றுட் காண்க.

அரச

இனி, திணையாவன நான்கு வகைய: அகத்திணை அகப்புறத் திணை, புறத்திணை, புறப்புறத்திணை என. என்னை?

66

அகமே அகப்புறம் புறமே புறப்புறம் எனநான் கென்ப திணையின் பகுதி”

என்றாராகலின்.

அகத்திணை இருவகைய: களவு, கற்பு என.

என்னை?

“களவும் கற்பும் கைகோ ளாக

66

அளவில் அன்பின தகமெனப் படுமே'

“ஐந்திணை தழுவிய அகமெனப் படுவது கந்தருவ நெறிமையிற் களவொடு கற்பே"

66

“அவற்றுள் களவெனப் படுவ தூஉழ் *காவன் மரபின் பாற்பட வருமே'

66

"கற்பெனப் படுவது கரணமோ டியையக் கூடிய பிறவும் கூறுதற் குரித்தே”

66

66

‘எய்திய இரண்டும் கைகோள் என்ப”

“கிழவன் பாங்கன்,

கிழத்தி தோழி திறத்தன கூற்றே”

இன்ன பிறவும் அகத்திணை.

இனி, அகப்புறமாவன, காந்தள், வள்ளி, சுரநடை, முது பாலை தாபதம், தபுதாரம், குற்றிசை, குறுங்கலி, பாசறை முல்லை, இல்லாண்முல்லை என்ற இவை பத்தும்; கைக் கிளை, பெருந்திணை என்ற இவை இரண்டும் என்க.

(பா.வே.) *கரவன்.