உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யாப்பருங்கலம்

“கண்ணிமை நொடியென 'அவ்வே மாத்திரை நுண்ணிதின் உணர்ந்தோர் கண்டவாறே"

என்றார் தொல்காப்பியனார்.

66

'கண்ணிமை கைந்நொடி என்றிவை இரண்டும் மின்னிடை அளவே எழுத்தின் மாத்திரை”

என்றார் சங்கயாப்புடையார்.

266

ஒன்றிரண் டொருமூன் றொன்றரை அரைகால் என்றனர் பொழுதிவை இமைநொடி அளவே

என்றார் பிறரும்.

47

தொல். எழுத்து. 7

யா. கா. 4 மேற்.

விளி முதலாயினவற்றுள் மூன்று மாத்திரையின் மிக்க பல மாத்திரையானும் அளபெடுத்து வருமாயினும், அவை செய்யுட்களுக்குப் பெரியதோர் உபகாரம்பட நில்லா ஆகலின், அவற்றிற்கு இலக்கணம் எடுத்து ஓதினாரில்லை எனக் கொள்க. வன்மையாவன, க, ச, L , த, ப, ற என்னும் ஆறும்.

மென்மையாவன, ங, ஞ, ண, ந, ம, ன என்னும் ஆறும்.

இடை

என்னை?

66

66

மையாவன, ய, ர, ல, வ, ழ, ள என்னும் ஆறும்

'வன்மை என்ப க ச ட த ப ற;

மென்மை என்ப ங, ஞ, ண, ந, ம, ன;

இடைமை என்பயரலவழள

'அவைதாம்,

புள்ளியொடு நிற்றல் இயல்பென மொழிப;

புள்ளியில் காலை உயிர்மெய் ஆகும்"

என்பவை சங்க யாப்பு ஆகலின். அவை ஒரோ 3ஒன்று அரையரை மாத்திரை எனக் கொள்க. என்னை?

466

“உறுப்பின் அளவே ஒன்றன் பாகம்'

என்றார் கையனார்.

66

அரைநொடி அளவின் அறுமூ ‘வுடம்பே”

1. அவையே.

2. குறில் ஒரு மாத்திரை. நெடில் இரண்டு மாத்திரை. உயிரளபெடை மூன்று மாத்திரை. ஐகாரமும் ஔகாரமும் ஒன்றரை மாத்திரை, ஆய்தம், மெய், குற்றியலிகரம், குற்றியலுகரம் அரை மாத்திரை. ஆய்தக் குறுக்கம், மகரக்குறுக்கம் கால் மாத்திரை. ஒற்றளபெடை ஒரு மாத்திரை.

3. ஒவ்வொன்று. 4,5. மெய்யெழுத்து.