உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48

766

இளங்குமரனார் தமிழ் வளம் – 13

'அரைநொடி என்ப தியாதென மொழியின்,

நொடிதரக் கூடிய இருவிரல் இயைபே"

என்றார் சங்கயாப்புடையார்.

சார்பில் தோன்றும் தன்மைய ஆவன, குற்றியலிகரமும், குற்றியலுகரமும், ஆய்தமும் என இவை. என்னை?

66

"குற்றிய லிகரம், குற்றிய லுகரம்,

ஆய்தப் புள்ளி என்றிவை மூன்றும்

சார்பில் தோற்றத் துரிமையு முளவே'

என்ப ஆகலின்.

2ஏழிடத்து ஆறு வல்லெழுத்தினையும் ஊர்ந்து உகரம் வந்தால், அதனைக் ‘குற்றியலுகரம்' என்று வழங்குப. என்னை?

66

எழுவகை இடத்தும் குற்றிய லுகரம்

வழுவின்றி வரூஉம் வல்லா றூர்ந்தே”

என்பது பல்காயம் ஆகலின்.

- யா.கா.4.மேற்

எழுவகை இடமாவன, நெடிற் கீழும், நெடிலொற்றின் கீழும், குறிலிணைக் கீழும், குறிலிணைக் ஒற்றின் கீழும், குறில் நெடிற் கீழும், குறில் நெடில் ஒற்றின் கீழும், குற்றொற்றின் கீழும் என இவை. என்னை?

"நெடிலே குறிலிணை குறில்நெடில் என்றிவை

ஒற்றொடு வருதலொடு குற்றொற் றிறுதியென்று ஏழ்குற் றுகரக் கிடனென மொழிப”

என்றார் ஆகலின்.

அவை வருமாறு:

3நாகு, 4காசு, காடு, காது, 5காபு, “காறு- என நெடிற்கீழ் ஆறு வல்லெழுத்தினையும் ஊர்ந்து குற்றியலுகரம் வந்தவாறு.

1. நொடியின் கூறுபாட்டை, “உன்னல் காலே ஊன்றல் அரையே, முறுக்கல் முக்கால் விடுத்தல் ஒன்றே” என்னும் நூற்பாவான் அறிக, யா. கா. 4. மேற்.

2.

3.

தொல்காப்பியரும், பவணந்தி முனிவரும் குற்றுகரத்திற்கு ஆறிடமே வேண்டினர்.

"ஈரெழுத் தொருமொழி உயிர்த்தொடர் இடைத்தொடர்

ஆய்தத் தொடர்மொழி வன்றொடர் மென்றொடர்

ஆயிரு மூன்றே உகரங் குறுகிடன்”

“நெடிலோ டாய்தம் உயிர்வலி மெலியிடை

தொடர்மொழி இறுதிவன்மை ஊருகரம்

அஃகும் பிறமேற் றொடரவும் பெறுமே

இளமை ; எருதுமாம். 4. குற்றம். 5. புறா. 6. பொழுது.

-

தொல். குற்றிய. 1

- நன். எழுத்து. 39