உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யாப்பருங்கலம்

49

நாக்கு, 'காச்சு, 2காட்டு, காத்து, காப்பு, காற்று - என நெடிலொற்றின்கீழ் ஆறு வல்லெழுத்தினையும் ஊர்ந்து குற்றியலுகரம் வந்தவாறு

வரகு, முரசு, 3முருடு, மருது, 4துரபு,

5

கவறு

-

எனக்

குறிலிணைக்கீழ் ஆறு வல்வெழுத்தினையும் ஊர்ந்து குற்றியலுகரம் வந்தவாறு.

அரக்கு, பொரிச்சு, “தெருட்டு, குருத்து, 'பொருப்பு, எனக் குறிலிணை ஒற்றின்கீழ் ஆறு வல்லெழுத் தினையும் ஊர்ந்து குற்றியலுகரம் வந்தவாறு.

8சிரற்று

-

அசோகு, 'பலாசு, °மலாடு, கெடாது, "புதாபு, ாது, "புதாபு, 12விராறு எனக் குறில் நெடிற் கீழ் ஆறு வல்லெழுத்தினையும் ஊர்ந்து குற்றியலுகரம் வந்தவாறு.

நமாக்கு, 13 தடாச்சு, 4பனாட்டு, கெடாத்து, புதாப்பு, விராற்று- எனக் குறினெடில் ஒற்றின்கீழ் ஆறு வல்வெழுத் தினையும் ஊர்ந்து குற்றியலுகரம் வந்தவாறு.

நக்கு, 15கச்சு, கட்டு, கத்து, “கப்பு, கற்று-- எனக் குற்றொற்றின் கீழ் ஆறு வல்வெழுத்தினையும் வல்வெழுத்தினையும் ஊர்ந்து குற்றியலுகரம் வந்தவாறு.

பிறவும் வந்தவழிக் கண்டுகொள்க.

அக்குற்றியலுகரந்தான் வருமொழிக்கு முதலில் யகரம்

வந்தால், திரிந்து குற்றியலிகரம் ஆம். என்னை?

1766

“யகரம் முதல்வரின் உகரம் ஒழிய இகரமும் குறுகும் என்மனார் புலவர்'

என்றார் பல்காயனார்.

“வல்லெழுத் தாறோ டெழுவகை இடத்தும் உகரம் அரையாம்; யகரமோ டியையின் இகரமும் குறுகும் என்மனார் புலவர்”

என்றார் அவிநயனார்.

մ யா.கா.4 மேற்.

1. ஒலிக் குறிப்பு. 2. எடுத்துக்காட்டு. 3. ஒருவகைத் தோற் கருவி. 4. செலுத்து. 5. சூது. 6.தெளியச்செய். 7. மலை 8. வெகுள். 9. ஒருவகைப் பலா. 10. மலையமானாடு. 11. கதவு வீட்டுப் புகும் வழி. 12. கலந்தது. 13. பெரியது; வளைந்தது. 14. பனைவெல்லம். 15. மார்புக்கட்டு 16. கவடு.

17. “யகரம் வரும்வழி இகரம் குறுகும்

உகரக் கிளவி துவரத் தோன்றாது'

- என்பது தொல். எழுத்து. 410.