உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யாப்பருங்கலம்

51

ஆய்தம் ஒரு மொழியில் வருகின்றுழிக் குற்றெழுத்தின் கீழாய், உயிர் மெய்யாகிய வல்லெழுத்தினைச் சார்ந்து வரும்.

என்னை?

"குறியதன் முன்னர் ஆய்தப் புள்ளி

உயிரோடு புணர்ந்தவல் லாறன் மிசைத்தே”

-

எழுத்து . 38

என்றார் தொல்காப்பியனார்.

“ஆய்தந் தானே குறியதன் கீழ்த்தாய்

வலியதன் மேல்வந் தியலும் என்ப”

என்றார் கையனார்.

அவை வருமாறு,

'அஃகம், 2 வெஃகா,3 கஃசு, 4கஃடு, கஃது, கஃபு, 5கஃறு எனக்கொள்க. தொடர் மொழியுள்ளும் அவை வருமாறு வந்த வழிக் கண்டு கொள்க.

‘ஆய்தம்’ எனினும், ‘அக்கேனம்' எனினும், 'தனிநிலை' எனினும், ‘புள்ளி' எனினும், 'ஒற்று' எனினும் ஒக்கும். என்னை? “அக்கேனம் ஆய்தந் தனிநிலை புள்ளி ஒற்றிப் பால ஐந்தும் இதற்கே

என்றார் அவிநயனார் ஆகலின்.

யா. கா. 4 மேற்.

இனி ஐகார ஔகாரக் குறுக்கம் ஆமாறு : அளபெடுத்தற் கண்ணும் தனியே சொல்லுதற் கண்ணும் என இரண்டிடத்தும் அல்லாத வழி வந்த ஐகார ஒளகாரம் என்பன தம் அளவிற் சுருங்கி ஒன்றரை மாத்திரையாம். ஐகாரம் தனியே நின்று ஒரோவிடத்து ஒரு பொருளைச் சொல்லுதற்கண். ஒன்றரை மாத்திரையாம். என்னை?

“அளபெடை தனியிரண் டல்வழி ஐஔ உளதாம் ஒன்றரை. *தனிமையும் ஆகும்’

என்றார் அவிநயனார்.

அவை மொழிக்கு முதலும்,

நின்றவழிக் குறுகுவ எனக் கொள்க.

-

մ

  • பா.வே.சரி

யா. கா. 4. மேற்.

டையும், இறுதியும்

வரலாறு : ஐப்பசி, “மைப்புறம், 7ஐக்கட்டி

6

எனவும்,

1. தானியம். 2. திருமால் திருப்பதிகளுள் ஒன்று. 3. காற்பலம். 4. கஃடு, கஃது, கஃபு என்பவை எழுத்தல் இசை என்பர். 5. கறுத்துள்ளதைக் காட்டும் குறிப்பு. (தொல். எழுத்து. 40. மேற்). 6.60LD கருமை, ஆடு. 7.

ஐ-அழகு.

(பாவே). *ஒன்றரை மாத்திரையும் ஒரு மாத்திரையுமாம். *தனியும் ஐ யாகும். பார்க்க. அன்றும் இன்றும் பக்.47.