உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52

இளங்குமரனார் தமிழ் வளம் – 13

1பௌவம், 2மௌவல், 3கௌவை

எனவும் ஐகார ஔகாரம் முதல் நின்று

மாத்திரை ஆயினவாறு.

இடையன், மடையன், உடைவாள், கடைவாள்

6 எனவும்,

4

ன்றரை

சிறுதலை நௌவிமான், நறுமலர் 5வௌவினார், ஒல்லென் பௌவம், கல்லென் கௌவை

எனவும் இடைநின்ற ஐகார “ஔகாரம் ஒன்றரை மாத்திரை ஆயினவாறு.

குவளை, தவளை, தினை, பனை

எனவும்,

அந்தெள, அன்னௌ

எனவும் இறுதி நின்ற ஐகார ஒளகாரம் ஒன்றரை மாத்திரை ஆயினவாறு.

பை, மை, கை, வை, தை

எனவும்

கௌ, சௌ, வௌ

எனவும்,

6

7

தனியே நின்ற ஐகார ஒளகாரம் ஒன்றரை மாத்திரை ஆயினவாறு கண்டு கொள்க.

இனி, மகரக் குறுக்கம் ஆமாறு : மகரம் ஒரோவிடத்து அரை மாத்திரையிற் சுருங்கிக் கால் மாத்திரையாம். என்னை?

866

அரையளவு குறுகல் மகரம் உடைத்தே இசையிட னருகும் தெரியுங் காலை

-எழுத்து. 13

என்பது தொல்காப்பியம். அது வகரமோடு கூட்டத்தின் கண் குறுகும். என்னை?

1. கடல். 2. மல்லிகை. 3. துன்பம், ஒலி. 4. பெண்மான். 5. கவந்தார். 6. ஔகாரம் மொழிமுதற் கண்ணே குறுகும் எனப் பிற ஆசிரியர் கூற இவர் இடையும் கடையும் குறுகும் என்றது தொடர் மொழியில் என்க.

1.

8.

“இரண்டு மாத்திரை அளவினவாய ஐகார ஔகாரங்கள் தனியே நிற்புழியும் ஒன்றரை மாத்திரை அளவினவாகக் குறுகும் என ஈண்டுக் கூறியது செய்யுட்கண் ஓசை இடர்ப்பட்டு ஒலிக்குமிடத்து அவ்வோசை இடர்ப்படாதவாறு கொள்ளற்கு என்க. - முதற் பதிப்பு. அரையளவு குறுகல் தனக்குரிய அரைமாத்திரை அளவினும் குறுகுதல் ; அஃதாவது கால் மாத்திரை யாதல். அருகும் - வழக்கிற் சிறுபான்மையாக வரும்.