உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யாப்பருங்கலம்

வகார மிசையும் மகாரம் குறுகும்’

எனத் தொல்காப்பியரும்,

‘வகரமோ டியையின் மகரமும் குறுகும்’

எனப் பிறருங் கூறினார் ஆகலின்.

53

- எழுத்து. 330

வரலாறு : வரும் வளைகாரன், தனம் விளைநிலம், வாழும்

வணிகன்,

சூழும் வாவிகள்- எனக் கொள்க.

பிற வகையானும் வந்தவழிக் கண்டுகொள்க.

'சார்பிற் றோன்றும் தன்மைய என்று மிகுத்துச் சொல்லிய அதனால், அகரத்தோடு யகர ஒற்று வந்தும், ஆய்தம் வந்தும் ஐகாரத்தின் பயத்தவாம். அகரத்தோடு உகரம் வந்தும், வகர ஒற்று வந்தும் ஔகாரத்தின் பயத்தவாம். என்னை?

66

ஆய்தமும் யவ்வும் அவ்வொடு வரினே

ஐயென் எழுத்தோடு மெய்பெறத் தோன்றும்”

'உவ்வொடு வவ்வரின் ஔவிய லாகும்

என்றார் அவிநயனார்.

வரலாறு : அய்யன், கய்தை, தய்யல், மய்யல், கய்யன் - என அகரத்தோடு யகர ஒற்று, ஐயன், 'கைதை, தையல், மையல், கையன் என்னும் ஐகாரத்தின் பயத்தவாயினவாறு.

கஃசு, கஃதம், கஃசம் - என அகரத்தோடு ஆய்தம் வந்து, கைசு, கைதம், கைசம் என்னும் ஐகாரத்தின் பயத்தவாயினவாறு. அவ்வை, நவ்வி, அஉவை, நஉவி-என அகரத்தோடு வகர ஒற்றும் உகரமும் வந்து, ஒளவை, நௌவி என்னும் ஒளகாரத்தின் பயத்தவாயினவாறு.

இனி, ‘அசைக்கு உறுப்பே என்பதில் ஏகாரம் ஈற்றசை ; அல்லன எண்ணேகாரம். என்னை?

"தேற்றம் வினாவே பிரிநிலை எண்ணே ஈற்றசை இவ்வைந் தேகா ரம்மே”

- தொல். இடை. 9

என்ப ஆகலின். 'என்றா’ என்பது, எண்ணிடைச்சொல்.

என்னை?

1. தாழை.