உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54

இளங்குமரனார் தமிழ் வளம் – 13

“உம்மை தொக்க எனாவென் கிளவியும் ஆவீறாகிய என்றென் கிளவியும்

ஆயிரு கிளவியும் எண்ணுவழிப் பட்டன’

எனத் தொல்காப்பியரும்,

66

'குற்றொற் றென்றா நெட்டொற் றென்றா ஒற்றே உயிரே என்மனார் புலவர்'

எனப் பிறரும் சொன்னார் ஆகலின்.

ஆங்கு

-தொல். இடை. 41

என்று மிகுத்துச் சொல்லிய அதனால்,

ரழுத்தே ஒரு பொருளைப் பயந்து நிற்பது ‘சிறப்பெழுத்து’ என்றும், இயைந்து பொருள் பயப்பது 'உறுப்பெழுத்து' என்றும் வழங்கப்படும் எனக் கொள்க.

எழுத்தெல்லாம் ஒற்றும், உயிரும், உயிர்மெய்யும் என அடங்குவனவற்றை இவ்வாறு விகற்பித்துச் சொல்லியது, எழுத்துக்களது பெயர் வேறுபாடுகள் எல்லாம் அறிவித்தற்கும், அப்பெயரால் பெயராக்கி ஆளுதற்கும் எனக் கொள்க. அல்லதூஉம், பிறரும் விகற்பித்துச் சொன்னார் எனக் கொள்க.

என்னை?

“குறினெடில் அளபெடை உயிருறுப் புயிர்மெய் வலிய மெலிய இடைமையொ டாய்தம் இஉ ஐயென் மூன்றன் குறுக்கமோடு அப்பதின் மூன்றும் அசைக்குறுப் பாகும்

என்றார் காக்கைபாடினியார்.

“குறிய நெடிய உயிருறுப் புயிர்மெய்

வலிய மெலிய இடைமை அளபெடை மூவுயிர்க் குறுக்கமும் ஆமசைக் கெழுத்தே”

என்றார் சிறுகாக்கைபாடினியார்.

"நெடிய குறிய உயிர்மெய் உயிரும்

வலிய மெலிய இடைமை அளபெடை மூவுயிர்க் குறுக்கோ டாமசைக் கெழுத்தே”

என்றார் அவிநயனார்.

66

குறினெடில் ஆய்தம் அளபெடையை காரக் குறில்குற் றிகர உகரம் - மறுவில்

யா. கா. 4. மேற்