உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யாப்பருங்கலம்

உயிர்மெய் விராய்மெய்யொ டாறா றெழுத்தாம்

2

1செயிர்வன்மை மென்மை சமன்

என்பது நாலடி நாற்பது எழுத்துப் புறனடை. "உயிருறுப் புயிர்மெய் தனிநிலை எனாஅக் குறினெடில் அளபெடை மூவினம் எனாஅ 3அஃகிய நாலுயிர் மஃகான் குறுக்கமோடு 4ஐந்துதலை யிட்ட ஐயீ ரெழுத்தும்

அசைசீர் தளைதொடைக் காகும் உறுப்பென வசையறு புலவர் வகுத்துரைத் தனரே” இது பெரிய பம்மம்.

“குறிலுயிர் வல்லெழுத்துக் குற்றுகர ஆதி குறுகிய ஐஔமவ் வாய்தம் - நெறிமையால்

ஆய்ந்த அசைதொடைதாம் வண்ணங்கட் கெண்முறையால் ஏய்ந்தன நானான் கெழுத்து.”

து நாலடி நாற்பது அசைப் புறனடை.

5

இவ்வெழுத்துக்களாற் செய்யுள் வருமாறு :

ஐயாவோ ஐயாவோ எய்யாயோ எய்யாயோ கையாயோ ஐயா களிறு.'

ஃது உயிர் மிக்கு வந்த செய்யுள்.

“பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்

பற்றுக பற்று விடற்கு.'

இது மெய் மிக்கு வந்த செய்யுள்.

6

“படைகுடி கூழமைச்சு நட்பர ணாறும் உடையா னரசரு ளேறு.

99

து உயிர்மெய் மிக்கு வந்த செய்யுள்.

“கற்க கசடறக் கற்பவை கற்றபின்

நிற்க அதற்குத் தக.

இது குற்றெழுத்து மிக்கு வந்த செய்யுள்.

“யாகாவா ராயினும் நாகாக்க; காவாக்கால் 7சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.

து நெட்டெழுத்து மிக்கு வந்த செய்யுள்.

55

குறள். 350

குறள். 381

- குறள். 391

- குறள். 127

1. செயிர் சினம். வல்லொலியுடையது வல்லினம் ஆகலின் 'செயிர்’ என்னு அடைமொழி தந்தார். 2. சமன் - நடுவே நிற்பது ; இடையெழுத்து. 3.குற்றியலிகரமும் குற்றியலுகரமும் ஐகாரக் குறுக்கமும் ஔகாரக் குறுக்கமும். 4. பதினைந்தெழுத்து. 5. ‘ஐயா களிற்றைக் கைத்து (சினந்து) எய்யாயோ' என்க. 6. கூழ் - உணவு. 7. துன்புறுவர்.