உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யாப்பருங்கலம்

மிக்கனவும் கைக்கோடல் வேண்டி வியன்பொருளை மெய்ப்படுக்கும் ஆங்கே விதப்பு”

6 எனவும்,

“மகரக் குறுக்கம் வகுத்ததுதான் ஆய்தக்

கிகரக் குறுக்கம் முதலாப் - புகரற்ற

நாலொன்றும் எண்ணாதே நாட்டுதற்கு ஞாபகமாய்

நூலொன்றி நிற்றற் பொருட்டு"

59

எனவும் போந்த இவற்றை விரித்துரைத்துக் கொள்க. இன்னும் மகரக் குறுக்கத்திற்குப் பயன்; *மரபுணர்த்துமிடத்துக் கண்டு கொள்க. ஈண்டு உரைப்பிற் பெருகும். (2)

ஆய்தத்திற்கும் ஒற்றிற்கும் சிறப்பு விதி

ஙு. தனிநிலை ஒற்றிவை தாமல கிலவே

அளபெடை அல்லாக் காலை யான.

என்பது என் நுதலிற்றோ?' எனின், மேற்சூத்திரத்துள் பொது வகையானே எல்லா எழுத்தும் அசைக்கு உறுப்பாம் என்றார். அவற்றுள் சிலவற்றை விலக்கி, ஒரோ வழியே ஆமாறு உணர்த்துவான் எடுத்துக் கொண்டார். இச்சூத்திரம், ஆய்தத் திற்கும் ஒற்றிற்கும் எய்தியதோர் இலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று.

இ. ள்.) ‘ஆய்தமும் ஒற்றும் தாமாக அலகு காரியம் பெறா அளபெழுந்தவழி அல்லாது,' என்றவாறு.

எனவே, ஆய்தமும் ஒற்றும் 'ஒரோஒன்றேயாய் நின்று அலகுபெறா, என்பதாம்.

"கார்க்கடல், 2 கார்க்கோதை, கதிர்ச்செந்நெல், கடாய்க் கன்று, று, என இவற்றுள் இரண்டு ஒற்று ஒருங்கு நிற்பினும், ஒரு மாத்திரையுடைய எழுத்தின் பயத்தவாய் அலகு காரியம் பெறுங்கொலோ?” எனின், 'பெறா' என்பதூஉம் பெறப்பட்டது.

என்னை?

66

“அளபெழின் அல்லதை ஆய்தமும் ஒற்றும்

அலகியல் பெய்தா என்மனார் புலவர்.

என்றார் அவிநயனார் ஆகலின். “ஒற்றள பெழாவழிப் பெற்றவல கிலவே'

6

எனவும்,

1. தனித்து. 2. கருங்கூந்தல்.

(பா.வே). *மாபுராணத்திடத்து.