உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62

66

6

இளங்குமரனார் தமிழ் வளம் – 13

'வாளேர் தடங்கண் வகையாலும், 'வைகலும் வாளா விருக்கும் வகையாலும் - நாளும் விழைந்ந்து *வேறொன்று சிந்திப்பாள் போலும் குழைந்ந்த கோதை குறிப்பு’

எனவும்,

66

கண்ண் டண்ண்ணெனக் கண்டும் கேட்டும்”

எனவும் 2ஒற்று அளபெழுந்து நேரசை

பிறவும் வந்துழிக் கண்டு கொள்க.

"ஆய்தமும் ஒற்றெனப் பெற்றசை யாக்கமென் றோதி னாருள ராகவும் ஒண்டமிழ்

3

நாத ராயவர் நா நலி போசையிற்

கேது வென்றெடுத் தோதினர் என்பவே"

எனவும்,

“நலிபு வண்ணம் ஆய்தம் பயிலும்” எனவும் கூறினார் ஆகலின்.

மலைபடு. 352.

ஆயினவாறு.

- தொல். செய். 223

4"மறையவரும் வந்தார் வசிட்டரும் வந்தார் குறைவின்றிக் கொண்டாடல் வேண்டும்- மறையவருள் மிக்க விழுக்குணங்கள் நோக்கி வியநிலத்து

மக்கள் வசிட்டரா மாறு'

பிறவும் வந்தவழிக் கண்டு கொள்க.

1.

நாள்தோறும்

2. 'இதனாற் பெறப்பட்டது யாதோவெனின் ஒற்றுக்கு மாத்திரை அரையன்றே? அது அளபெழுங்கால் ஈரொற்றாய் நின்று ஒரு மாத்திரை அளவுபெறும். அதனால் அது குற்றெழுத்து என்று கொள்ளப்படும். அப்போது அது தனக்கு முன்னும் பின்னும் நின்ற குற்றெழுத்துடன் கூடின் இருகுறில் இணைந்த நிரையசை என்று கொள்ளப்படும். கொள்ளப்படவே ஓரசையின் பாற்பட்டுச் சீராகாது செய்யுட் சந்தம் கெடும். ஆகலின் அங்ஙனம் கொள்ளாது தனித்தனி நின்ற இருகுறிலாகக் கொண்டு 'தேமா' என்னும் வாய்பாட்டான் அலகு செய்து கொள்க என்றது பெறப்பட்டது அம்ம், கொம்ம், அரும்ம், கரும்ம், கண்ண், தண்ண், என்பவற்றுள் நின்ற ஈரொற்றையும் குறிலின்பாற் படுத்து நேரசையாகக் கொள்ளின் வெண்டளை பிழையாது நிற்றல் கண்டு கொள்க..” மு. ப.கு.

3.

நலிபு வண்ணம்.

பண்

4. 'பிறப் பொன்றானே சிறப்புற்ற மறையவரும், பிறப்பான் மட்டுமன்றித் தவம் முதலிய விழுமிய புகளாலும் உயர்வெய்திய வசிட்டரும் வந்தனர். இருவரையும் குறைவின்றிக் கொண்டாடுதல் வேண்டும்; ஏனெனின், மறையவருள் மிக்க விழுக்குணங்களை நோக்கிப் பெருநில மக்கள் தாங்களும் அப்பண்புகளை யுடையவர்களாய் வசிட்டரேயாக முயலுமாறு' என்க. மிக்க விழுக்குணங்களான் மேன்மையடைந்தாரைச் சார்ந்தொழுகும் ஏனையரும் அம்மேலோரெய்தும் சிறப்பினைத் தாமும் நன்னெறி கடைப்பிடித்தொழுகி எய்தல்போல், சிறப்பில் எழுத்துக்களும் சிறப்புடை எழுத்துகளைச் சார்ந்து மொழியிற் பயின்று சிறப்பெய்தும் என்பது இச்செய்யுளின் ஒட்டணியாற் பெற்ற பொருள் என்க; என்பது இரண்டாம் பதிப்பின் குறிப்புரை. *(பா. வே). வேமென்று.