உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யாப்பருங்கலம்

இகர உகரக் குறுக்கங்களுக்கும் உயிரளபிற்கும் சிறப்பு விதி

4. தளைசீர் வண்ணம் தாம்கெட வரினே குறுகிய இகரமும் குற்றிய லுகரமும்

'அளபெடை ஆவியும் அலகியல் பிலவே.

63

இச்சூத்திரம், குற்றியலிகரம், குற்றியலுகரம், உயிரள படை கட்கு எய்தியதோர் இலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று.

இ-ள்)

தளையும், சீரும், வண்ணமும் சொன்ன இலக்கணத்தோடு மாறுகொள்ள வருமே எனின், குற்றிய லிகரமும் குற்றியலுகரமும் உயிரளபெடையும் அலகு காரியம் பெற எனக் கொள்க,' என்றவாறு.

எனவே. ‘எதிர் மறுத்தல்' என்னும் இலக்கணத்தால், “தளைசீர் வண்ணம் தாம்கே டில்வழிக்

66

குறுகிய இகரமும் குற்றிய லுகரமும்

அளபெடை ஆவியும் அலகியல் பினவே” என்பதாயிற்று.

இதன் கருத்து, “தளையும், சீரும், வண்ணமும் ஆமாறு சொன்ன இலக்கணத்தோடு மாறு கொள்ளாது ஓர் உப காரம்பட நிற்பின், குற்றியலிகரமும் குற்றியலுகரமும் உயிரள பெடையும் அலகுகாரியம் பெறும்,' என்றவாறு.

தளை சீர் வண்ணம் ஆமாறு சொன்ன இலக்கணமும் தளை சீர் வண்ணம்' எனப்படும், உபசார வழக்கினால்; குண்டல நீல பிங்கல கேசிகளது தோற்றமும் தொழிலும் சொன்ன செய்யுட்களும் வேறொரு வழக்கினால் ‘குண்டகேசி, நீலகேசி, பிங்கலகேசி' என்னும் பெயர் பெற்றாற் போல எனக் கொள்க.

"தளைசீர் வண்ணம்” என்புழி உம்மை தொகுத்து நிறுத்துப் பின்னர்க் 'குறுகிய இகரமும் குற்றிய லுகரமும் அளபெடை ஆவியும்' என்று உம்மை விரித்து, ஒரு நெறியின்றிச் சொல்ல வேண்டியது என்னை?” எனின், 'ஈண்டு நிரனிறை என்னப்பட ப்படாது, கூடுமாற்றாற் கொள்ளப்படும்,' என்பது அறிவித்தற்கு வேண்டப்பட்டது. அவை வருமாறு:

1.

உயிரளபெடை

2

2. பொருந்தும் முறையால், கூறுமாற்றால் என்பவையும் பாடம்.