உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யாப்பருங்கலம்

65

என 'இக்குறளடி வஞ்சிப்பாவினுள் குற்றுகரம் வந்து ஆறசைச் சீரும் ஐயசைச் சீரும் ஆயின. இவ்வாறு வருக என்னும் இலக் கணம் இன்மையால் ஆண்டுக் குற்றியலுகரங்களை இவ்விலக் கணத்தால் அலகு பெறா என்று களையச் சீர் சிதையா தாம்.

"தாழிரும் பிணர்த்தடக்கை' என்னும் இருசீரடி வஞ்சிப்பா வினுள், ‘எனைப்பல எமக்குத்தண்டாது ாது' என ஐயசைச்சீர் வந்ததனுள் குற்றுகரத்தை அலகு பெறாது என்று களையச் சீர் சிதையாதாம்.

3"நலஞ்செலத் தொலைந்து புலம்பொடு பழகி' என்னும் பாட்டினுள், 'குண்டுநீடுநீர்க் குவளைத் தண்சுனை, குறித்துக் கூடுவோர் நெறிமயங்கவும்' எனவும், 'போதுசேர்ந்துகூடு பொறிவண்டினம், புரிந்துவாங்குவீங்கு நரம்பிமிர்தலின்' எனவும் வந்த வஞ்சியடிகளுள்ளும் குற்றுகரங்களே அலகு பெறா என்று களையச் சீர் சிதையாதாம். பிறவும் அன்ன.

இவற்றுக்கு இலக்கணம் ஓத வேண்டியது என்னை? குற்றிகரக் குற்றுகரங்கள் வந்து “இன்னாங்காய் அறுத்திசைத் தமையால் குற்றப்பாடு என்று களைந்திடாமோ?' எனின், அற்றன்று; ‘அறுத்திசைப்பும் வெறுத்திசைப்பும் குற்றம் என்று களைந்திடப்படா, பிற சான்றோர் செய்யுளகத்தும் அருகி வருமாகலின், எனக் கொள்க.

66

அளபெடைக்குக் கூறுமாறு:

"இடைநுடங்க ஈர்ங்கோதை பின்றாழ வாட்கண் புடைபெயரப் போழ்வாய் திறந்து- கடைகடையின் உப்போஒ எனவுரைத்து மீள்வாள் ஒளிமுறுவற் கொப்போநீர் வேலி உலகு?"

யா. கா. 36 மேற்.

என இதனுள் 'உப்போஒ' என்புழி அளபெழுந்து கலித் தளை தட்டு, 5"வெள்ளையுட் பிறதளை விரவா' என்னும் இலக்கணத்தோடு மாறு கொள்ளுமாகலின், ஆண்டு அவ்வள பெடையை இவ்விலக்கத்தான் அலகு பெறாது என்று விலக்க, வெண்டளை பிழையாதாம்.

"பிண்ணாக்கோஒ என்னும் °பிணாவின் முகத்திரண்டு

கண்ணோக் குடையனபோற் கட்டுரைக்கும்: - ‘பிண்ணாக்குக்

1. இருசீரடி. இச் செய்யுளிலுள்ள 'கோடு' என்னும் சொல் தந்தம், மலைமுகடு, சங்கு ஆகிய பொருள்களில் வந்தது. 'ஊடு நீடு பிடி' என்பதை' 'நீடு ஊடு பிடி' என்றியைக்க.

2.

4.

யா. வி. 93. மேற். 3. யா. வி. 95. மேற்.

இனிமை யில்லாததாய். 5. யா.வி. 22. 6. பெண்.