உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

இளங்குமரனார் தமிழ் வளம் – 13

கொள்ளீரோ?' என்பாள்தன் கூரெயிறு காளையரை உள்ளீர்வ போல உள

எனவும்,

99

“பல்லுக்குத் தோற்ற பனிமுல்லை; பைங்கிளிகள்

சொல்லுக்குத் தோற்றின்னந் தோன்றிலவால் ; - நெல்லுக்கு நூறோஒநூ றென்பாள் நுடங்கிடைக்கும் வெம்முலைக்கும் 'மாறோமால் அன்றளந்த மண்?”

6

எனவும்,

“களிச்சாத்தாஅ என்றியான் கட்காண நின்று விளித்தாலும் வாரான் விரைந்து 2களிச்சாத்தன். வாளாவே தின்பான் வேலைக்குப் போகலான் காளையாம் பைதல் கவடு”

- யா. கா. 36. மேற்.

6 எனவும் இவற்றுள் பண்ட மாற்றின்கண்ணும், விளித்தற் கண்ணும் அளபெடை 3அநுகரணங்கள் வந்து, வெண்பாவினுள் நாலசைச் சீராய், 4வண்ணம் அறுப்புழிச் 5செப்பல் இசையன வெண்பா என்னும் இலக்கணத்தோடு மாறாய், செப்பலோசை சிதைய நிற்கும், ஆகலின், ஆண்டு உயிரளபெடைகளை இவ் விலக்கணத்தால் அலகு பெறா என்று விலக்க, வண்ணம் சிதையாதாம்.

“அளபெடை ஆவியும் அலகில,' என்னாது, அலகியல்பில' என்ற விதப்பினால், ஆண்டு உயிரளபெடை களை நெட் டெழுத்தே போலக் கொண்டு வழங்கப்படும் எனக் கொள்க. இனி, அவை அலகு பெறுமாறு.

666

““சிலைவிலங்கு நீள்புருவம் சென் 'றொசிய நோக்கி

8

முலை விலங்கிற் றென்று 'முனிவாள் - 1°மலைவிலங்கு தார்மாலை மார்ப ! தனிமை பொறுக்குமோ

11

1"கார்மாலை கண்கூடும் போழ்து?’

யா. கா. 11. 41. மேற்.

- தண்டி. 16. மேற்.

தனுள் குற்றியலுகரம் இவ்விலக்கணத்தோடு மாறு கொள்ளாது நின்று அலகு பெற்றவாறு கண்டுகொள்க.

1. பதிலாகக் கொள்வதோ. 2. களிச்சாத்தன், வாளாவே தின்பான் வேலைக்குப் போகலான், காளையாம் பைதல் கவடு - இவ்வடிகள் ஏட்டுப் பிரதியிலில்லை; முன்பதிப்பிலுள; என்பது இ. ப. கு.

3.

ஒலிக்குறிப்புக்கள் 4. பாவின்கண் நிகழும் ஓசை விகற்பம்.

5. யா. வி. 57. 6. வில் தோற்றோடுதற்குக் காரணமான.

7.

வளைய 8. தழுவுதலினின்றும் விலகியது. 9. வருந்துவான்.

10. மலையையும் தோற்கச் செய்யும். 11. கார்கால மாலைப்பொழுது.