உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யாப்பருங்கலம்

“வந்துநீ சேரின் உயிர்வாழும் ; வாராக்கால் 'முந்தியாய் பெய்த வளைகழலும்; - முந்தியாம் 2கோளானே கண்டனம் கோல்குறியாள் இன்னுமோர் நாளானே நாம்புணரு மாறு.

67

யா. கா. 36 மேற்.

இதனுள், 'வந்துநீ' என்புழிக் குற்றியலுகரமும், 'முந்தியாய்' என்புழிக் குற்றியலிகரமும் தளை சீர் வண்ணங்கட்கு ஓர் உபகாரம் பட நின்று அலகு பெற்றவாறு பிறவும் அன்ன.

66

'காவல் உழவர் களத்தகத்துப் போரேறி

3நாவலோஒ என்றிசைக்கும்; *நாளோதை - காவலன்றன் கொல்யானை மேலிருந்து கூற்றிசைத்தாற் போலுமே நல்யானைக் கோக்கிள்ளி நாடு

முத்தொள்ளாயிரம் - 4

என இதனுள், 'நாவலோஒ' என்புழி உயிரளபெடை தளை சீர் வண்ணங்களோடு மாறு கொள்ளாது நின்று அலகு பெற்றவாறு.

“கடாஅக் களிற்றின் கட்படா மாதர்

‘படாஅ முலைமேல் துகில்’

6 எனவும்,

56

7

காஅரி கொண்டான் கதச் °சோ மதனழித்தான் 'ஆஅழி ஏந்தல் அவன்

குறள் 1087

- யா. வி. 41. மேற்.

எனவும் இவற்றுள், 'கடாஅக் களிறு, படாஅ முலை; காஅரி,’ ‘ஆஅழி' என்புழி வந்த உயிரளபெடைகள் தளை சீர் வண்ணங்களோடு மாறு மாறு கொள்ளாது நின்று அலகு

பெற்றவாறு.

866

தூஉஉத் தீம்புகை தொல்விசும்பு போர்த்ததுகொல்

பாஅஅய்ப் பகல்செய்வான் பாம்பின்வாய்ப் பட்டான்கொல்

9.

மாஅ மிசையான்கொல் நன்னன் நறுநுதலார்

1°மாஅமை எல்லாம் பசப்பு” - மலைபடுபடாம். இறுதிவெண்பா. என்பதூஉம் கொள்க.

1.

5.

முன்னே, தாய். 2. பட்டறிவால். 3. நெற்போர் விடுவோர் பகட்டினைச் செலுத்தும் ஒலிக்குறிப்பு. 4. படுக்காத ; நிமிர்ந்த.

கருநிறக்காளை. 6. ஓரரணம். 7. திருமால்.

8. 'தூஉஉ' என்பது நான்கு மாத்திரை பெற்று நின்றதாகலின் இது செப்பலோசை பிழையாது வந்தது என்பர் நச். (தொல். நூன் 6) தூஉத் தீம்புகை எனக் கொண்ட பேராசிரியர் இதனை ஆசிரியத்தளை எனக் காட்டினார். (தொல். செய்யுள் 62) 9. பரவி. 10. நிறம்.

(பா. வே).* நாவோதை.